பெருந்தொற்றுச் சூழலில் சுதந்திர தின விழாவொன்று இடம்பெறும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனை முன்னிட்டு சகல சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் இதில் தொற்று பரவலைத் தடுப்பதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
இம்முறை படைவீரர்கள், பொலிஸார் அடங்கலாக சுமார் ஆறாயிரம் பேர் சுதந்திர தின அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவர்கள் கடந்த சில நாட்களாக பயோ-பபல் என்ற உயிரியல் குமிழி பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அமைய ஒத்திகைகளில் ஈடுபட்டார்கள் என்று இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.