கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் தயாரிக்கும் தடுப்பூசிகளை இலங் கையில் பயன்படுத்துவது குறித்து தேசிய மருந்து ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங் கள் இன்னும் ஆய்வு நிலையில் உள்ளன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா – சீனா கொரோனா தடுப்பூசிகள் தேசிய மருந்து ஒழுங்கு படுத்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர் எதிர்காலத்தில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்பச் சுகாதார சேவைகள், தொற்று நோய் மற்றும் கொவிட் தொற்று கட்டுப்பாட்டுத் தொடர் பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண் டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ரா ஜெனேகா கோவ்ஷீல்ட் தடுப்பூசி யைப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு (WHO) ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்நிலையில், ரஷ்யா – சீனா ஆகிய நாடுகளில் தயாரிக் கப்பட்ட தடுப்பூசியை உலகப் புகழ்பெற்ற அமைப்பு களால் அனுமதி வழங்காததால் இறக்குமதி செய்யத் தாமதமாகும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.