27 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி பொதுமக்களுக்குச் சலுகை விலையில் வழங்கு வதற்கான உடன்படிக்கையில் நேற்றைய தினம் கைச் சாத்திடப்பட்டது என வர்த்தக அமைச்சர் என பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பெப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை மூன்று மாதங் களுக்கு அத்தியாவசிய பொருட்களின் விலை ஒரு நிலை யான மட்டத்தைப் பேணுவது தொடர்பான உடன்படிக்கை நேற்றைய தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.
இந்தத் திட்டத்தின் கீழ், அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய், ரின் மீன், சவர்க்காரம் உள்ளிட்ட 27 வகையான பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.