ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் தலைவரான மகேந்திரசிங் தோனி படைத்துள்ளார்.
ஐபில் தொடரானது ஆரம்பித்த 2008ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை தோனி சம்பளமாக இந்திய மதிப்பி்ல் 137 கோடி ரூபா வாங்கியுள்ளார்.
இதேபோல் நடப்பு ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ள தோனிக்கு, 15 கோடி ரூபா சம்பளம் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் மொத்தம் 152 கோடி ரூபா சம்பளம் ஈட்டியுள்ள தோனி, ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.