More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • நாய்களால் சாப்பாட்டை மட்டுமல்ல அதை விட வேகமாக கொரோனா தொற்றையும் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
நாய்களால் சாப்பாட்டை மட்டுமல்ல அதை விட வேகமாக கொரோனா தொற்றையும் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
Feb 13
நாய்களால் சாப்பாட்டை மட்டுமல்ல அதை விட வேகமாக கொரோனா தொற்றையும் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

நாய்களின் மோப்ப சக்தி நம்முடைய கற்பனைக்கு எட்டாத ஒன்று. அதனால் தான் ராணுவத்திலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதிலும் நாய்கள் பெரும் பங்குவகிக்கின்றன. இது ராணுவ நாய்கள். நம்ம வீட்டு நாய்கள் வேறு டிபார்ட்மெண்ட். எங்கே என்ன இருக்கிறது என்பதை வாசனையை வைத்தே கண்டுபிடித்து விடும். ஹோட்டலில் இருந்து சாப்பாடு வாங்கிட்டு வந்தால் மோப்பம் பிடித்து நம்மையே சுற்றிவரும்.



நாய்களால் சாப்பாட்டை மட்டுமல்ல அதை விட வேகமாக கொரோனா தொற்றையும் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். எந்த அளவு வேகமென்றால் தற்போது நடைமுறையிலிருக்கு ஆர்டிபிசிஆர் சோதனையில் முடிவுகள் வெளியாகும் நேரத்தை விட அதிவேகமானதாம். இந்த விஷயத்தில் மருத்துவ சோதனைகள் ஸ்லோ டிரெய்ன் என்றால், நாய்கள் புல்லட் டிரெய்னாம். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் நாய்களைக் கொண்டு ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கின்றனர்.



ஆய்வாளர்களில் ஒருவரான டாமி டிக்கி, “ஏற்கனவே நாய்களால் கொரோனா தொற்றைக் கண்டுபிடிக்க முடியும் என ஆய்வுகள் நிரூபித்துவிட்டன. ஆனால், அவை அதி விரைவாகவும் மிக துல்லியமாகவும் கொரோனா தொற்றைக் கண்டுபிடிக்க முடியும் என எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. நாங்கள் பரிசோதித்த ஒரு நாய் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகக் கண்டறிந்தது. நாங்கள் நம்பவில்லை. இரண்டு வாரங்களுக்குப் பிறகு அந்த இரு நபர்களும் கொரோனா தொற்றோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்” என்றார்.



நாய்களின் மூளையில் மூன்றில் ஒரு பங்கு வாசனையை நுகர்வதற்காகவே இருக்கின்றன. 125-300 மில்லியன் ஆல்ஃபாக்டரி செல்கள் அதற்குத் துணைபுரிகின்றன. இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் இருப்பதை உணர்த்தும் கரிமச் சேர்மங்களை நுகரும் திறனைப் பெற்றுள்ளன. வைரஸுக்கென்று தனியாக வாசனை இல்லாத போதிலும், அதனால் ஒரு மனிதனுக்கு உண்டாகும் மாற்றத்தை வைத்து நாய்கள் கண்டுபிடிக்கின்றன.



 வைரஸால் வியர்வைச் சுரப்பிகள், சிறுநீர் ஆகியவற்றில் வெளியேற்றப்படும் பொருள்களின் மூலம் நாய்கள் மோப்பம் பிடித்து கொரோனா தொற்றை உறுதிசெய்கின்றன. இவ்வாறு ஆய்வாளர்கள் கூறினர். மொத்தமாக 18 நாய்களை நான்கு நாட்கள் பயிற்சிக்குட்படுத்தி ஆய்வில் ஈடுபடுத்தியதில், 83-100 சதவிகிதம் துல்லியமான முடிவை அவை காட்டியதாகவும் தெரிவிக்கிறார்கள்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun18

இந்தியாவில 

இலங்கையின் இன்றைய அவலத்திற்கு இந்தியாதான் பிரதான கார

Jan21

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்

Sep08

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள பொரணி அரசு மேல் நி

May23

தளர்வுகளற்ற பொதுமுடக்கம் நாளை அமலுக்கு வருவதையொட்டி,

Feb19

ஆளும் கட்சி அராஜகம் செய்யாமல் நேர்மையான தேர்தலை நடத்த

Jan01

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை மத்த

Jul11

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த முன்னாள் அதிமுக அ

May01

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வர

May15

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தா

Dec27

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இந்து மத தலைவர் காளிச்

Jan17

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தானின

Jun17

குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் <

Nov05

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.400 கோ

Aug02

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டச