More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது!
இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது!
Feb 14
இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது!

இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.



உலக நாடுகளையே உலுக்கி எடுத்த கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதிலும் 3000 மையங்களில் முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பூசி மீதான நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் குறைந்திருந்ததால் ஆரம்பக்கட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டினர். ஆனால், தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.



கடந்த மாதம் 16ம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் போடும் பணி நேற்று தொடங்கியது. இம்மாத இறுதிக்குள் முன்களப்பணியாளர்களுக்கு போடும் பணி முடிவடைந்து, மக்களுக்கு செலுத்தும் பணி தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 12,194 பேருக்கு கொரோனா உறுதியானதாகவும் 11,106 டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



இதுவரை 82,63,858 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும், ஒரே நாளில் 92 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மொத்த உயிரிழப்புகள் 1,55,642 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun28

காஷ்மீரின் ஜம்முவில் உள்ள விமானப் படைதளத்தில் டிரோன்

Jul16

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய தகவல் தொழில்ந

Sep09

இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என

Mar13

சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலை

Jul14

யாருடனும் பழகவில்லை என்று மனைவி எவ்வளவோ எடுத்து சொல்ல

Dec27

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இந்து மத தலைவர் காளிச்

Apr12

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகா மாநிலத்தை சே

Aug18

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ந்தேதி

Aug30