மட்டக்களப்பு வாவிக்கரை முதலாம் வீதி வாவியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
போதனா வைத்தியசாலையின் பின்பகுதி வாவிக்கரை முதலாம் வீதி வாவியில் குறித்த ஆணின் சடலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கண்டெடுக்கப்பட்டதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீதியின் வாவியில் சடலமொன்று கிடப்பதாக பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் இரவு 7.00 மணியளவில் சென்று சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
எனினும் சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், இவர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
அத்தோடு, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.