More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட்: கெய்ல் மேயர்ஸின் போராட்டத்தால் மே.தீவுகள் அணி திரில் வெற்றி!
பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட்: கெய்ல் மேயர்ஸின் போராட்டத்தால் மே.தீவுகள் அணி திரில் வெற்றி!
Feb 08
பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட்: கெய்ல் மேயர்ஸின் போராட்டத்தால் மே.தீவுகள் அணி திரில் வெற்றி!

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.



இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலையில் உள்ளது.



சட்டோகிராம் மைதானத்தில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.



இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 430 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.



இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மெயிடி ஹசன் 103 ஓட்டங்களையும் சகிப் ஹல் ஹசன் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், வோரிக்கன் 4 விக்கெட்டுகளையும் கோர்ன்வோல் 2 விக்கெட்டுகளையும் ரோச், கெப்ரியல் மற்றும் போனர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.



இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 259 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.



இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிரைஜ் ப்ரெத்வெயிட் 76 ஓட்டங்களையும் பிளக்வுட் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், மெயிடி ஹசன் 4 விக்கெட்டுகளையும் முஷ்டபிசுர் ரஷ்மான், தைஜூல் இஸ்லாம் மற்றும் நயீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.



தொடர்ந்து 171 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ஓட்டங்களை பெற்றிருந்தபோது தனது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 395 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.



இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொமினுல் ஹக் 115 ஓட்டங்களையும் லிடொன் தாஸ் 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், கோர்ன்வோல் மற்றும் வோரிக்கன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கெப்ரியல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.



இதனையடுத்து 395 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, போட்டியின் இறுதிநாளில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுது.



இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கெய்ல் மேயர்ஸ் ஆட்டமிழக்காது 210 ஓட்டங்களையும் போனர் 86 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், மெயிடி ஹசன் 4 விக்கெட்டுகளையும் தைஜூல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் நயீம் ஹசன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.



இப்போட்டியின் ஆட்டநாயகனாக, முதல் இன்னிங்ஸில் 40 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 210 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட கெய்ல் மேயர்ஸ் தெரிவுசெய்யப்பட்டனர்.



குறிப்பாக இப்போட்டியில் தனது முதல் போட்டியிலேயே இரட்டை சதத்தை பதிவுசெய்த கெய்ல் மேயர்ஸ் பல சாதனைகளை பதிவுசெய்யதார்.



அவர் இரட்டை சதத்தை பதிவுசெய்ததன் மூலம் ஆசியாவில் நான்காவது இன்னிங்ஸில் அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.



அத்துடன் ஆசியாவில் நான்காவது இன்னிங்ஸில் மிகப்பெரிய வெற்றி இலக்கை பதிவுசெய்த சந்தர்ப்பமாக இது பதிவானது. இதுதவிர ஒட்டுமொத்தமாக நான்காவது இன்னிங்ஸில் ஐந்தாவது மிகப்பெரிய வெற்றி இலக்கை அடைந்த சம்பவமாகவும் பதிவானது.



இதுதவிர நான்காவது இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த ஆறாவது வீரர் என்ற பெருமயை மேயர்ஸ் பெற்றுக்கொண்டார்.



மேலும் அறிமுக போட்டியிலேயே தனிப்பட்ட வீரரொருவர் பதிவுசெய்த ஐந்தாவது அதிகப்பட்ச வெற்றி இலக்காக இது பதிவாகியுள்ளது.



பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 11ஆம் திகதி டாக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்

Sep17

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய

May04

நடப்பு ஐபிஎல் சீசனின் ஐபிஎல் பிளே ஆஃப் குறித்து முக்

Jul15

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும்

Feb12

இந்திய பெங்களுரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத

Feb04

இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின்

May15

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர புதுப்பிக

Jun29

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரி

Jul06

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் ப

Aug16

பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்ட

May15

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர

Jul30

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இர

Jul06

கோவாவில் உள்ள காசா டிடோ கிளப் மிகவும் பிரபலமானது. அங்க

Mar22

ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்க

Feb01

         

கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக்