More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்!
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்!
Feb 20
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்!

பெங்களூரு மாநகராட்சி இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் பேசும்போது கூறியதாவது



உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பெங்களூருவில் பரவியுள்ளது. தென்ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் ஆபத்தானது. இது வேகமாக பரவக்கூடியது. அதனால் இத்தகைய வைரஸ்கள் பெங்களூருவில் பரவுவதை தடுக்க அதிகாரிகள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். கேரளா, மராட்டியத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. அதனால் பெங்களூருவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அதிகாரிகள் தீவிரமாக செயல்பட வேண்டும்.



3-ம் கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். இதற்காக பொதுமக்கள் தங்களின் பெயர்களை செயலியில் பதிவு செய்ய வேண்டும். பெங்களூருவில் குடிசை பகுதிகளில் வசிக்கும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க முன்னுரிமை அளிக்கப்படும். 50 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களை கண்டறியும் பணியை மேற்கொள்வது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.



அதாவது சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினை உடையவர்களை கண்டறிந்து தடுப்பூசி வழங்கப்படும். வீடு, வீடாக சென்று விவரங்கள் சேகரிக்கப்படும். இதற்காக ஒரு செல்போன் செயலி உருவாக்கப்படும். ஒவ்வொருவருக்கும் ரத்த பரிசோதனை செய்தால், தவறான தகவல்கள் வருவது தடுக்கப்படும். உருமாற்றம் அடைந்த கொரோனா பரவுவதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலை உண்டாகும்.



பெங்களூருவில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். கூட்டங்கள், விழாக்களிலும் இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கேரளா, மராட்டியத்தில் சில பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.



வருகிற மார்ச் மாதம் வரை மருத்துவத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டாம் என்று மாநில அரசிடம் கோரிக்கை விடுக்கப்படும். கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏதாவது இறப்பு நிகழ்ந்தால் அதுகுறித்து அன்றைய தினமே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.



இவ்வாறு மஞ்சுநாத் பிரசாத் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul05

உத்தர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்

Mar15

இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கருவடிக

Oct20

சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பா

Mar26

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை ந

Mar08

உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பா

Mar06

இந்தியாவில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்து

Oct19