More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இந்திய மீனவர்கள் 17 பேரை பாகிஸ்தான் கடற்பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்!
இந்திய மீனவர்கள் 17 பேரை பாகிஸ்தான் கடற்பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்!
Mar 01
இந்திய மீனவர்கள் 17 பேரை பாகிஸ்தான் கடற்பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்!

அரபிக்கடலில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கிரீக்குக்கு அருகே கடந்த 26-ந் தேதி இந்திய மீனவர்கள் 17 பேர் 3 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த பாகிஸ்தான் கடற்பாதுகாப்பு படையினர், மீனவர்கள் 17 பேரும் தங்கள் எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருப்பதாக கூறி, அவர்களை திரும்பிச்செல்லுமாறு எச்சரித்தனர்.



ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகளின் எச்சரிக்கையை மீனவர்கள் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து அங்கேயே மீன்பிடித்துக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து 17 மீனவர்களையும் கைது செய்த பாகிஸ்தான் அதிகாரிகள், அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், கராச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அரபிக்கடலில் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி பாகிஸ்தான் அரசு அடிக்கடி இந்திய மீனவர்களை கைது செய்து வருகிறது. நீண்ட மற்றும் மெதுவான சட்ட நடவடிக்கைகளால், இவ்வாறு சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் பல மாதங்களுக்கும் சில நேரங்களில் ஆண்டுக்கணக்கிலும் பாகிஸ்தானில் சிறையில் வாடும் சூழல் இருப்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb11

பிரிட்டன் ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகள

May17

அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ்.

Nov16

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமீப காலமாக த

Sep25

அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி இந்திய நேரப்ப

Mar07

உக்ரைன் அரசு சரணடையாவிட்டால் படையெடுப்பு தொடரும் என ர

Aug21

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறி

Mar29

வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் உ

Apr25

இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமான, கே.ஆர்.ஐ. நங

Jun09

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் குறித்து சீனா

Mar03

உக்ரைனுடனான போரில் தங்கள் படையினர் கொல்லப்பட்ட எண்ணி

Apr19

மேற்கு உக்ரைன் நகரில் ரஷிய படைகள் நடத்திய  தாக்குதல்

Mar08

ஹாங்காங்கின் தேர்தல் சீர்திருத்தங்களை மாற்றியமைத்தத

May31

அமெரிக்காவின் டென்னசி மாகாணம் ரதர்போர்ட் நகரில் உள்ள

Jul17