More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் காவல்துறையினர் விசாரணை!
சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் காவல்துறையினர் விசாரணை!
Mar 02
சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் காவல்துறையினர் விசாரணை!

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் மூன்று காவல்துறை பிரிவுகளின் காவல்துறையினர் இன்றையதினம்(02) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, வவுனியா ஆகிய காவல்துறை பிரிவுகளின் காவல்துறையினர் இவ்வாறு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



சிவசக்தி ஆனந்தனின் வவுனியாவில் உள்ள அலுவலகத்திற்குச் காலையில் சென்ற வவுனியா காவல்துறையினர் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் பங்கெடுத்தமை தொடர்பில் கேள்விகளைத் தொடுத்ததோடு நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகவும் சுட்டிக்காட்டினர்.



இதன்போது, தனது பெயர் குறிப்பிட்டு எவ்விதமான நீதிமன்ற உத்தரவுகள் வழங்கப்படவில்லை என்றும், தாம் நீதிமன்றத்தின் கட்டளைகளை மீறி நடக்கவில்லை என்றும் மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை கோரி நிற்கையில் அரசியல் கட்சியின் பிரதிநிதியாக மக்களுடன் மக்களாக போராட்டத்தில் பங்கேற்றதாகவும் சிவசக்தி ஆனந்தன் பதிலளித்துள்ளார்.



அத்துடன், ஒன்றுக்கு மூன்று தடவைகள் இவ்வாறு விசாரணை என்ற பெயரில் தான் உள்ளிட்ட குறிப்பிட்ட ஒரு சில அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை இலக்குவைத்து காவல்துறையினர் செயற்படுவது தொடர்பிலும் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.



அதன்போது ‘மேலிடத்து உத்தரவு’ என்று காவல்துறையினர் பதிலளித்ததோடு அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களிடத்தில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பதிலளித்துள்ளனர். இதேவேளை, வவுனியா காவல்துறையினரின் ஒருமணிநேர விசாரணைகளைத் தொடர்ந்து பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணி தொடர்பில் ஒட்டிசுட்டான் காவல்துறையினரும் , புதுக்குடியிருப்பு காவல்துறையினரும்சிவசக்தி ஆனந்தனிடத்தில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்படத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun06

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையை திறக்க அனுமதிக

Aug13

அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பத

Mar07

இலங்கை அரசு கோரிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்

Feb13

இலங்கையில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி தொ

Sep25

பொதுமக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெ

Mar08

பொய் சாட்சியத்தை உருவாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்ட

Oct20

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரி

Oct08

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாண

Jun18

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க

Mar23

உலகளாவிய ரீதியில் முன்னணி சுற்றுலா நாடுகளின் பட்டியல

Feb14

கொவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாடுகளி

May03

விக்ரம் படத்தின் ட்ரைலர் அறிவிப்பு

உலகநாயகன் கமல

Feb23

பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற

Feb09

நிதி அமைச்சினால் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கும்,

May31

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக் கொள்வனவில் அரசு பாரி