More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதியை எதிர்த்து குஷ்பு களம் இறங்குவாரா?
திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதியை எதிர்த்து குஷ்பு களம் இறங்குவாரா?
Feb 26
திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதியை எதிர்த்து குஷ்பு களம் இறங்குவாரா?

சென்னையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தேர்தல் வரலாற்றில் பேசப்படும் தொகுதி. 1977 முதல் இந்த தொகுதியில் தி.மு.க.வே வெற்றி பெற்று வருகிறது. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த தொகுதியில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றிருக்கிறார்.



1991 தேர்தலில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் ஜீனத் சர்புதீன் வெற்றி பெற்றார்.



தி.மு.க.வுக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதியாக கருதப்படும் இந்த தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனுதாக்கல் செய்துள்ளார்.



உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து பா.ஜனதா சார்பில் குஷ்பு களம் இறங்குவார் என்று தெரிகிறது.



ஏற்கனவே இந்த தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்பு கடந்த ஒரு மாதமாக இந்த தொகுதியில் தேர்தல் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

 



இதுபற்றி குஷ்புவிடம் கேட்டபோது, இந்த தொகுதியில் தான் போட்டியிடுவேனா என்பதை கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் உதயநிதி இந்த தொகுதியில் போட்டியிட்டால் சந்தோஷம் என்றார்.



சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் இந்த தொகுதி மட்டும் நட்சத்திர அந்தஸ்தை பெறுவது தொகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.



குஷ்பு, உதயநிதி இருவரும் நட்சத்திர பிரபலங்கள், இருவரும் தங்கள் தொகுதியில் போட்டியிடுவதை நினைத்து தொகுதி மக்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.



திரையிலும், டி.வி.யிலும் பார்த்த இருவரும் தங்கள் தெருக்களிலும், வீடு வீடாகவும் வருவதால் தொகுதி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளார்கள்.



குஷ்பு இப்போதே தொகுதியில் வீடு வீடாக சென்று கலக்கி வருகிறார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug28

கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரி

Jun23

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டில் நேற்ற

May16

கொரோனா தொற்று நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை ந

Jul25

தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமை

Feb02

டெல்லியில் இஸ்ரேலிய தூதரகம் அருகே தாக்குதலில் ஈடுபட்

May22

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூச

Jan20

சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவி

Mar10

நீர்மூழ்கி கப்பல்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை வடி

Jul24

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் டிரால

Aug10

பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை

Aug22

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தின் கின

Sep03

வடசென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட

Mar16

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்துள்ள சிஜர்சி என்ற

May29

வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடு

Feb26

காஷ்மீரில் எல்.ஓ.சி. என்னும் எல்லை கட்டுப்பாட்டு கோடு ப