More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு திமுக ஆதரவு- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு திமுக ஆதரவு- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Mar 14
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு திமுக ஆதரவு- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-



இந்திய ஒன்றியத்தின் வலிமை மிகுந்த பொருளாதாரக் கட்டமைப்பான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரைவார்ப்பது ஒன்றையே முழுநேர கொள்கையாக கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் நலனுக்கு விரோதமான செயல்பாடுகளால், எளிய மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருக்கும் பொதுத்துறை வங்கிகள் கடும் நெருக்கடியைச் சந்திக்கின்றன.



பொதுத்துறை வங்கிகளை இணைத்து, வங்கிச் சேவைகளின் பரவலாக்கத்தை முடக்கிய மத்திய அரசு, ஏற்கனவே ஐ.டி.பி.ஐ. வங்கிப் பங்குகளை விற்று தனியார்மயமாக்கியது போல மேலும் 2 பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க முன்வந்துள்ளது.



அரசுத் துறைகளின் பணப்பரிவர்த்தனை, வரிவசூல், ஓய்வூதியம் வழங்குதல் போன்ற பணிகளை பொதுத்துறை வங்கிகளின் கட்டுப்பாட்டில் இருந்து தனியார் வங்கிகளுக்கு மாற்றக்கூடிய முடிவையும் மத்திய அரசு எடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசின் ஜன்தன் திட்டம் முதல் கல்விக்கடன், விவசாயக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பலவும் பொதுத்துறை வங்கிகளால்தான் நடைபெறுகின்றன.



அத்தகைய பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கி, கார்ப்பரேட் நலன் காக்கும் நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகளுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறேன். பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதை எதிர்த்து மார்ச் 15, 16 தேதிகளில் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் மேற்கொள்ளும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.



இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan19

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண

Mar07

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டிய

Jun02

மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித

Jun23

கொரோனா காலகட்டத்தில் உலகம் முழுவதும் நிதி நெருக்கடி ஏ

Feb11

மனைவி தன் மதுவை குடித்துவிட்டார் என கணவன் அடித்துகொன்

Jul16

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப

Jun20
Sep21

இலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள

Sep22

தருமபுரி நகரில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட

Jul25

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் சி.எஸ்.ஆர். நிதி

Jan25

புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து

Feb24

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன

Jun27

அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான கட்டப்பட்டு வரு

Aug18

அழகிரியும், பாஜக வில் இணைகின்ற நாளை உருவாக்குவோம் என்

Sep06

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநா