More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • எடப்பாடி பழனிசாமியுடன் நேரடியாக விவாதிப்பதில் எந்த பலனும் இல்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்!
எடப்பாடி பழனிசாமியுடன் நேரடியாக விவாதிப்பதில் எந்த பலனும் இல்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்!
Mar 15
எடப்பாடி பழனிசாமியுடன் நேரடியாக விவாதிப்பதில் எந்த பலனும் இல்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்!

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



15-ந் தேதி (அதாவது இன்று) மதியம் 1.30 மணிக்கு கோவில்பட்டியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு மாலையே தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன். அ.ம.மு.க.விற்கு இந்தத் தேர்தலில் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. எங்களது கூட்டணி கட்சியினருக்கு மக்கள் வாக்களிப்பார்கள்.



அமைச்சர் கடம்பூர் ராஜூ வாகனத்தை சோதனை செய்த அதிகாரிகளை அவர் பணியிடம் மாற்றம் செய்தது அதிகார துஷ்பிரயோகம். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை காட்டுகிறது. சசிகலா அரசியலுக்கு மீண்டும் வருகைக்காக நான் வற்புறுத்துவேன்.



ஊழல்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் நேரடியாக விவாதிப்பதில் எந்த பலனும் இல்லை. மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்பேன். அதற்கு மக்கள் தக்க பதில் அளிப்பார்கள்.



தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. பண மூட்டைகளை நம்பி நிற்கிறது. ஒரு கட்சி, பணத்தை மட்டும் நம்பி தேர்தலை சந்தித்தால் அது எந்த மாதிரியான முடிவு வரும் என்பது இந்த தேர்தலில் தெரியவரும். இதுவரை ஆர்.கே.நகருக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.



இவ்வாறு அவர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct13

தமிழ்நாட்டில் 

காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தின் கனிகாம் என்ற பகு

Jul03

வடமாநிலங்களில் கோலோச்சும் 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டை

Aug02

முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தன்னை நேரில் சந்தித்துப்

Aug27

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்ச

Oct10

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு விசேட ஏற்பாட

Jul20