More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இந்தோனேசியாவில் பஸ் பள்ளத்தில் விழுந்து 27 பேர் பலி!
இந்தோனேசியாவில் பஸ் பள்ளத்தில் விழுந்து 27 பேர் பலி!
Mar 12
இந்தோனேசியாவில் பஸ் பள்ளத்தில் விழுந்து 27 பேர் பலி!

இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் சுபாங் என்ற இடத்தில் ஒரு இஸ்லாமிய பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், டாசிக்மலாயா மாவட்டத்தில் உள்ள புனித தலத்துக்கு நேற்று முன்தினம் சென்று விட்டு பஸ்சில் திரும்பிக்கொண்டிருந்தனர்.



இரவு நேரத்தில் பஸ், சுமேதாங் மாவட்டத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி 20 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விட்டது. பஸ்சில் இருந்தவர்கள் அலறினர். உடனடியாக மீட்பு பணி முடுக்கி விடப்பட்டது.



இந்த கோர விபத்தில் 27 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 39 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பலியானவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.



இந்த விபத்துக்கு காரணம் பஸ்சில் ‘பிரேக்’ செயல்படாதது தான் என விபத்தில் படுகாயங்களுடன் உயிர் தப்பியவர்கள் தெரிவித்தனர். இந்தோனேசியாவில் சாலைகள் மோசமாக இருப்பதால் விபத்துக்கள் நடப்பது சாதாரணமான ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ம் ஆண்டு அங்கு ஒரு பஸ் 80 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததில் 35 பேர் உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May18

சீனாவின் தெற்கு குவாங்சி மாகாணத்தில் கடந்த மார்ச் மாத

Feb10

உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவி

Apr05

ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் ஏப்ரல் 5

Feb12

பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந்

Jun06

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் இன்றளவிலும

Apr01

சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் ஓராண்டுக்கு மேலா

Feb05

கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிர

Feb14

இந்தோனேசியாவில் இராட்சத அலையில் சிக்கிய 11 பேர் உயிரிழ

Sep09

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஒரே நாள் இரவில் மழையும்,

May29

ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் ஆப

May04

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய அதன் படைகளை குவிப்பதாக பிரித்த

Jul27

வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்ப

Jun08