More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது - டிடிவி.தினகரன்
எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது -  டிடிவி.தினகரன்
Mar 20
எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது - டிடிவி.தினகரன்

கடலூர் மாவட்டம் புவனகிரியில், அ.ம.மு.க.வின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று (18/03/2021), சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியின் அ.ம.மு.க. வேட்பாளர் நந்தினி தேவி, புவனகிரி சட்டமன்றத் தொகுதியின் அ.ம.மு.க. வேட்பாளர் பாலமுருகன், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியின் அ.ம.மு.க. வேட்பாளர் நாராயணசாமி மற்றும் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியின் அ.ம.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் உமாநாத் ஆகியோரை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார்.



அப்போது பேசிய டிடிவி.தினகரன், "தி.மு.க. யாரையும் நம்பாத ஒரு கட்சி. குஜராத்தில் உள்ள ஐபேக் நிறுவனத்தை மட்டும் நம்புகிறது. 50 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை. அடுத்த ஒரு கட்சி துரோகக் கட்சி, அது எந்த கட்சி என்று உங்களுக்குத் தெரியும். இங்கு வந்த முதல்வர் வானத்திலிருந்து குதித்து போல பேசியிருப்பார். நாம் தொண்டர்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம். அவர்கள் பணத்தை நம்பி தேர்தலில் நிற்கிறார்கள். பணமூட்டை தோலில் போட்டுக் கொண்டு தேர்தலில் நிற்கின்றனர். தற்போது எடப்பாடி பழனிசாமிக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது.



வீட்டுத் தலைவிகளை ஏலம் எடுப்பது போல ரூபாய் 1,000, ரூபாய் 1,500 என்று கூறி வருகிறார்கள். அரசு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்று கூறும் எடப்பாடி பழனிசாமி, நான்கரை ஆண்டுகளாக ஏன் அரசு வேலை கொடுக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். கமிஷன் ஆட்சி இருக்காது, 69 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீட்டைக் கணக்கெடுத்து யாரும் பாதிக்காத அளவுக்கு சம நீதியுடன் உள்ஒதுக்கீடு வழங்கப்படும். எனவே, எங்களது வேட்பாளர்களை வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார். 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul17

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்

Mar12

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்

Jul30

பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலு

Apr11

மராட்டியத்தில் கொரோனா 2-வது அலை விசுவரூபம் எடுத்து மக்

Jan04

தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவலைக் கட்டு

Feb28

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 'அமேசோனியா - 1'

Apr10

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு கு

Apr12

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வரு

Apr21

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் தொழில், வர்

Sep23

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று மா

Feb22

எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பது தான் பழமொழிக்கு

Jul04