More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • கொரோனா பரவலை கட்டுப்படுத்த அஜ்மானில் புதிய நடமாடும் மருத்துவ நிலையம்!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அஜ்மானில் புதிய நடமாடும் மருத்துவ நிலையம்!
Mar 23
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அஜ்மானில் புதிய நடமாடும் மருத்துவ நிலையம்!

அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துதல் மற்றும் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இதை தொடர்ந்து பொதுமக்கள் எளிதில் கொரோனா பரிசோதனை செய்வதற்கும், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு வசதியாகவும் நடமாடும் மருத்துவ நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.



அதன்படி, தேசிய அவசர சேவை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், அமீரக சுகாதாரம் மற்றும் தடுப்புத்துறை அமைச்சகம் மற்றும் ஷேக்கா பாத்திமா பிந்த் முபாரக் தன்னார்வ திட்டம் ஆகியவை இணைந்து அஜ்மானில் புதிதாக நடமாடும் மருத்துவ நிலையத்தை ஏற்படுத்தியுள்ளது.



இந்த நடமாடும் மருத்துவ நிலையத்தை, நேற்று அஜ்மான் போலீஸ் தலைவரும், அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஷேக் சுல்தான் பின் அப்துல்லா அல் நுயைமி தொடங்கி வைத்தார். பின்னர் அவற்றில் உள்ள வசதிகள் குறித்து பார்வையிட்ட அவர் கூறியதாவது:-



கொரோனா பரவலை கட்டுப்படுத்த வசதியாக அஜ்மானில் ஏற்கனவே தற்காலிக ஆஸ்பத்திரியை அஜ்மான் பட்டத்து இளவரசர் ஷேக் அம்மார் பின் ஹுமைத் அல் நுயைமி தொடங்கி வைத்தார். தற்போது இந்த நடமாடும் மருத்துவ நிலையம் மூலம், பொதுமக்கள் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இந்த பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றனர். சர்வதேச தரத்துக்கு இணையான வகையில் சேவைகள் செய்யப்பட்டு வருகிறது.



இந்த மையத்துக்கு காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பரிசோதனைகளை செய்து கொள்வதுடன், தடுப்பூசிகளையும் போட்டு செல்கின்றனர்.



கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த நடமாடும் மருத்துவ நிலையம் மிகவும் உதவியாக இருக்கும். அஜ்மான் பகுதியில் மட்டும் 19 நடமாடும் மருத்துவ நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.



இவ்வாறு அவர் கூறினார்.



இந்த தொடக்க விழாவில் அஜ்மான் மருத்துவத் துறையின் இயக்குனர் ஹமத் தரிம் அல் சம்சி மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr16

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் காஷ்மீர், பஞ்சா

Oct05

வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியா ஏவிய ஏவுகணை சொந்தநா

Feb14

ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் சர்வதேச அரசியலில் பெரும

May13

கொரோனா விவகாரத்தில் இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி

May20

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Sep26

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணம் எல்பாசோ என்ற இடத்

Sep29

சிங்கப்பூரில் 1970-ம் ஆண்டுக்கு பிறகு அந்த நாட்டின் மக்க

Mar24

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரைய

Aug18

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

May04

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் இந்தியாவுக்க

Jul03

விமான போக்குவரத்தின் முக்கிய பகுதியாக ஐக்கிய அரபு அமீ

Mar10

உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்ய இராணுவ வீரர்களை ப

Aug22

மெக்சிகோ நாட்டை நேற்று கிரேஸ் சூறாவளி புயல் தாக்கியது

Mar28

நடிகர் சூர்யா சமீபத்தில் தான் வாடிவாசல் படத்தின் டெஸ்

Sep25

 ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான் தீவ