More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பல பெண்களை கைவிட்டவர் கமல் நடிகர் ராதாரவியின் சர்ச்சை பேச்சு!
பல பெண்களை கைவிட்டவர் கமல் நடிகர் ராதாரவியின் சர்ச்சை பேச்சு!
Mar 23
பல பெண்களை கைவிட்டவர் கமல் நடிகர் ராதாரவியின் சர்ச்சை பேச்சு!

பாஜகவை ஆதரவாளரும் நடிகருமான ராதாரவி கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய ராதாரவி, தன்னை நம்பி வந்த பெண்களை காப்பாற்ற முடியாமல் கைவிட்ட கமல் எப்படி தமிழகத்தை காப்பாற்றுவார் என்று கூறினார்.



தொடர்ந்து பேசிய அவர், “வானதி சீனிவாசனை ஆதரித்து பரப்புரை செய்வது என் கடமை. கமல் நேர்மையற்றவர். அவர் கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வாக்குகளை பிரிக்க திமுகவின் பி டீமாக களமிறக்கப்பட்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகள் ரூ.27 கோடி பணம் பெற்றுக்கொண்டு திமுக கூட்டணியில் உள்ளனர். காங்கிரஸ் செல்வாக்கை இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. சுயமான பேச செய்யாதவர் ஸ்டாலின்; அவர் பேப்பரில் இருப்பதை பார்த்து படிப்பார். இப்படி பட்டவர்கள் இருக்கும் திமுக கூட்டணி நிச்சயம் தோல்வியை தழுவும்” என்றார்.



கடந்த 69 ஆண்டு காலமாக திராவிட காற்றை சுவாசித்தவர்கள் தற்போது தேசிய காற்றை சுவாசிக்க முன்வந்துள்ளோம். திமுக முஸ்லீம்களின் நண்பன் இல்லை; எதிரி. ஆனால் இஸ்லாமியர்களின் நண்பன் போல் காட்டிக்கொள்கிறது. குடியுரிமை சட்டம் அவசியமானது; அது இருந்தால் தான் வெளிநாட்டவரை அடையாளம் காண முடியும் ” என்று கூறினார். நடிகர் ராதாரவிக்கு இதுபோன்று மற்றவர்கள் மீது தனிப்பட்ட வகையில் சேறை வாரி பூசுவது புதிதானது அல்ல. நயன்தாரா குறித்து ஒருமுறை பேசிய அவர், சீதையாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றும், நயன்தாரவைப் பற்றி வராத செய்திகளே கிடையாது மக்கள் அதையெல்லாம் மறந்து விடுவார்கள் என்று அருவருக்கத்தக்க வகையில் பேசியிருந்தார். இதனால் திமுகவில் இருந்து விரட்டப்பட்ட அவர் திமுக – அதிமுக என மாறி மாறி கட்சி தாவலில் ஈடுபட்டது சலித்து விட்டதால் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan30

இலங்கைக்கு அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பு

Jun11

திருச்சி மாவட்டம் கல்லணையில் முதலமைச்சர் 

மதுரை- விருதுநகர் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை நடை

Oct02

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் விழா இன

May14

இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் போது சிறையில் இருந்து,

Apr07

கொரோனா வைரஸ் அதிவிரைவாக பரவி வருவதாக எச்சரித்துள்ள மத

Jun26

2021-22 கல்வியாண்டு முதல் M.Phil படிப்பு ரத்து செய்யப்படுவதாக&n

Apr03

ராஜஸ்தான் மாநில புத்தாண்டின் முதல் நாளான நேற்று நவ சம

Mar12

தங்கத்தால் ஆன “தங்க கோவில்” என்றழைக்கப்படும் ஸ்ரீ

Jun18