More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • முதல்வர் தாய் பற்றி ஆ.ராசா அவதூறு பேச்சு - குஷ்பு கண்டனம்
முதல்வர் தாய் பற்றி ஆ.ராசா அவதூறு பேச்சு - குஷ்பு கண்டனம்
Mar 28
முதல்வர் தாய் பற்றி ஆ.ராசா அவதூறு பேச்சு - குஷ்பு கண்டனம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர தொகுதியாக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி மாறியிருக்கிறது. சினிமா நட்சத்திரமாக திகழ்ந்த நடிகை குஷ்பு அரசியலில் திமுக, காங்கிரஸ் என கடந்த பத்தாண்டுகளாக பயணித்து வந்தாலும் முதல் முறையாக தேர்தல் அரசியலில் அவர் அடியெடுத்து வைத்திருப்பது இந்தத் தேர்தலில் தான்.



திமுகவின் கோட்டையாக வர்ணிக்கப்படும் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனுக்கு போட்டியாக தொகுதியில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். பல்வேறு கருத்துக்கணிப்புகளின் திமுகவுக்கே ஆயிரம் விளக்கு தொகுதி சாதகமாக இருப்பதாக கூறப்பட்டாலும் தன்னம்பிக்கையுடன் அவர் தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருவது எதிர் முகாமினரை கலக்கமடையச் செய்திருக்கிறது.



இந்நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, முதல்வர் பழனிசாமி குறித்து பேசியவை புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.



திமுக தலைவர் ஸ்டாலினை ஒரு பக்கம் புகழ்ந்தும் அவருடன் முதல்வரை ஒப்பிட்டு பேசுகையில் முதல்வர் பழனிசாமி தாயை பற்றி அவதூறாக ஆ.ராசா பேசியிருப்பது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியின் வேட்பாளரான குஷ்பு, முதல்வர் பழனிசாமி குறித்து ஆ.ராசா பேசியது என்னால் நம்ப முடியவில்லை, அவர் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று குஷ்பு கூறியிருக்கிறார். இதனிடையே ஆ.ராசா பேசியது திமுகவினரை சங்கடப்படுத்தியுள்ளது.



ஆ.ராசாவின் பேச்சை திமுக எம்.பி கனிமொழி மறைமுகமாக கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் “அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb06

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்தியா கங்கண

May21

இந்திய கடனுதவியின் கீழ் 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக

Apr06

சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டையில

Jan02