மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பாரதி சீனிவாசனும் காங்கிரஸ் சார்பில் மயுராவும் கலத்தில் இருக்கிறார்கள். இதனால் கமல்ஹாசன் தீவிர பிரச்சாரம் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆனால் உடல் அவருக்கு ஒத்துழைக்க வில்லை. காலில் செய்துக்கொண்ட அறுவை சிகிச்சையின் வலி அவ்வப்போது வந்து அவஸ்தைக்கு உள்ளாகிறார். சில தினங்கள் மட்டுமே ஓய்வில் இருந்தவர் மீண்டும் களம் இறங்கி விட்டார்.
கோவையில் மீண்டும் களம் இறங்கிய கமல்ஹாசன் அது குறித்து, “கோவையில் விஸ்வகர்மா சமுதாய மக்களைச் சந்தித்து உரையாடினேன். இத்தனை அற்புதமான பொற்கொல்லர்களின் கலைத்திறனை அழிய விட்டிருக்கிறார்கள். வாழ்வை நசிய விட்டிருக்கிறார்கள். இவர்களுக்கென்றொரு நல வாரியத்தை அமைத்தே தீரவேண்டும்” என்கிறார்.