More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சுற்றுலா மையம் அமைப்பதனை நிறுத்துமாறு கோரி போராட்டம்!
சுற்றுலா மையம் அமைப்பதனை நிறுத்துமாறு கோரி போராட்டம்!
Mar 26
சுற்றுலா மையம் அமைப்பதனை நிறுத்துமாறு கோரி போராட்டம்!

வவுனியாக்குளம் சுற்றுலா மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.



வவுனியா குளத்திற்கான மக்கள் செயலணியால் குறித்த சத்தியாக்கிரகப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்.



வவுனியா மாவட்டத்தின் குடிநீர்த்தேவைக்கான நிலத்தடி நீருக்கும், விவசாய நீர்ப்பாசனத்திற்கும் கால்நடை வளர்ப்பிற்கும் குளங்களே ஆதாரமாக உள்ளன. இந்த நிலையில் வவுனியாவிலுள்ள பல குளங்களும் விவசாய நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு எங்கள் கண்முன்னேயே இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன.



தற்போது சிறியஅளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றுலா மையம் வியாபார நோக்கில் தொடர்ந்து விஸ்தரிக்கப்படுமாயின் குளத்தின் நீரேந்து பகுதி மென்மேலும் குறைவடைந்து செல்லும் அபாயமுள்ளதையும், சுற்றுலாமையத்தின் குத்தகைதாரர் நகரசபையுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை மீறிக் கட்டடங்களை அமைத்துள்ளதையும் நாங்கள் சுட்டிக்காட்டியே வந்திருந்தோம்.



இதனால் குளத்தில் போடப்பட்ட மண் முற்றாக அகற்றப்பட்டு குளத்தின் நீரேந்து பகுதி பழையநிலைக்கு கொண்டுவரப்பட வேண்டுமென்பதையும் நீர்ப்பரப்பிற்கு பாதிப்பின்றிய முறையில் மிதக்கக்கூடிய பொறிமுறைகளால் பூங்காவை அமைக்கலாம் என்றும் எமது கோரிக்கைகளில் வெளிப்படுத்தியிருக்கிறோம். எனவே வவுனியாக்குளம் மீதான ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிடில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் என்றனர்.



போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குளங்களை சாக்கடை ஆக்குவதா அபிவிருத்தி, அடுத்த தலைமுறைகளை குடிநீருக்கு கையேந்தவிடாதே, குளம்காப்போம், குலம்காப்போம், வலிந்துகாணாமல் ஆக்கப்படும் வவுனியாக்குளம், குளமா?குதூகலமா? போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.



போராட்டத்தில் மாவட்டத்தினை சேர்ந்த பொது அமைப்பினர், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்தரப்புகள், குளத்திற்கான மக்கள் செயலணியினர், பெண்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.



குறித்த போராட்டம் இன்று மாலை 4 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

கலேவல-வீரகலவத்த பகுதியில் காதலித்த யுவதியை பார்க்கச்

Jul25

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 2

Jun05

வடமாகாண மக்களுக்கு வழங்கப்பட்ட 50,000 சினோபோம் கோவிட் -19 த

Sep20

உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகளை

Mar23

உலகளாவிய ரீதியில் முன்னணி சுற்றுலா நாடுகளின் பட்டியல

Sep17

குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக

Sep27

இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்

May31

புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்க

Sep25

2022 ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் மொத்தம் 968 மில்லியன் டொ

Oct16

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார

Mar02

இரண்டு புற்றுநோயாளிகளை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக

Apr10

உயர்ந்த  கட்டிடங்களுக்கு  மாறாக    ரம்மியமான  ச

Mar20

இரத்த இருப்பு குறைவடைந்து வருவதால் இரத்த தானம் செய்ய

May01

இரத்து செய்யப்பட்ட பல ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்

Jan26

யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல