More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • குருவிக்கு கூட வீடு உள்ளது ஓபிஎஸ் உருக்கமான பேச்சு!
குருவிக்கு கூட வீடு உள்ளது ஓபிஎஸ் உருக்கமான பேச்சு!
Apr 02
குருவிக்கு கூட வீடு உள்ளது ஓபிஎஸ் உருக்கமான பேச்சு!

துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சருமான ஆர். பி உதயகுமார், உசிலம்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் ஐயப்பன், சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கம் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.



செல்லம்பட்டியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியபோது, ’’புரட்சித்தலைவர் மூன்று முறை தமிழகத்தில் முதலமைச்சராகி சத்துணவு திட்டம் உட்பட சரித்திர திட்டங்களை நாட்டு மக்களுக்கு தனது சிறப்பான ஆட்சி நடத்தினார். புரட்சித்தலைவி அம்மாவும் அதேபோல் தொலைநோக்குத் திட்டங்களை தந்தார்.



ஒரு மனிதனுக்குத் தேவை உண்ண உணவு உடுத்த உடை வசிக்க இருப்பிடம். மாதம்தோறும் அனைத்து குடும்பங்களுக்கும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கி தமிழகத்தில் உணவு பாதுகாப்பினை அம்மா வழங்கினார். நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வண்ணம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இலவச வேட்டி – சேலை, திட்டத்தை அறிமுகம் செய்தார். அதன் மூலமாக ஆண்டுதோறும் விலையில்லா வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. குருவிக்கு கூட வீடு உள்ளது. 2023 ல்அனைத்து மக்களுக்கும் தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று புரட்சித்ததலைவி அம்மா அறிவித்தார்.



அதன்படி 12 லட்சம் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தர நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை ஆறரை இலட்சம் மக்களுக்கு தரமான வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. 2023 அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.



பெண்கள் நாட்டின் கண்கள் என்பார்கள். இரண்டு பெண் குழந்தை பிறந்தால் அவர்கள் பெயரில் வைப்பு நிதி வங்கியில் செலுத்தப்பட்டு 18 வயது பூர்த்தியானவுடன் வட்டியுடன் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது பெண்கள் திருமண வயதை அடைந்தால் தாலிக்கு 4 கிராம் தங்கம் 25 ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும் படித்த பெண்களுக்கு 50,000 நிதி உதவியும் வழங்கப்பட்டு வந்தது 2016 ஆண்டு தேர்தல் அறிக்கையில், ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகள் தேர்தல் வாக்குறுதி தருவார்கள் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையை எதையும் நிறைவேற்றவில்லை பொய் சொல்லி மக்களிடம் ஏமாற்றினார்கள்.



இரண்டு ஏக்கர் நிலம் தரப்படும் என்று கூறினார்கள் யாருக்கும் கொடுக்கவில்லை. சட்டமன்றத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது நாங்கள் கேட்டோம். அப்போது கருணாநிதி கோபமாக கையாளுவது கையளவு நிலமாவது கொடுப்போம் என்று கூறினால் அது கூட யாருக்கும் கொடுக்கவில்லை திமுக தேர்தல் அறிக்கை கள்ள நோட்டுகள் செல்லாது. ஆனால் கழகத் தேர்தல் அறிக்கை கள்ளநோட்டு செல்லும். ஆகவே தொடர்ந்து அம்மாவின் அரசு மக்கள் சேவை செய்திட திருமணம் திருமங்கலம் தொகுதி வேட்பாளர் ஆர். பி. உதயகுமார், உசிலம்பட்டி வேட்பாளர் ஐயப்பன், சோழவந்தான் வேட்பாளர் மாணிக்கம் ஆகியோருக்கு உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலைக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’’என்றார் ஓபிஎஸ்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug18

சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசும் ப

Mar27

கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் 

Feb24

 உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு தாயகம் அழைத

Feb25

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23-ந்தேதி கலைவ

Nov04

பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை, எல்லைப்பகுதிய

Mar15

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்

Mar07

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங

May30

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு

Feb04

சென்னை: நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பியுள்ள

Jun18