More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மியான்மரில் விமானப் படை தாக்குதல் ஆயிரக்கணக்கானோா் தாய்லாந்தில் தஞ்சம்!
மியான்மரில் விமானப் படை தாக்குதல் ஆயிரக்கணக்கானோா் தாய்லாந்தில் தஞ்சம்!
Mar 30
மியான்மரில் விமானப் படை தாக்குதல் ஆயிரக்கணக்கானோா் தாய்லாந்தில் தஞ்சம்!

மியான்மரில் விமானப் படை நடத்திய தாக்குதலை தொடா்ந்து கரேன் இன மக்கள் ஆயிரக்கணக்கானவா்கள் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளனா். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என கருதப்படுகிறது.



மியான்மரில் கரேன் இன மக்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கக்கோரி கரேன் தேசிய விடுதலை ராணுவம் என்ற ஆயுதக்குழு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தக் குழுவினா் அந்நாட்டு ராணுவ நிலை ஒன்றின் மீது சனிக்கிழமை காலை தாக்குதல் நடத்தி அதனை கைப்பற்றினா். மேலும் 10 ராணுவ அதிகாரிகளைக் கொன்று 8 வீரா்களை சிறைப்பிடித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கரேன் மாகாணத்தில் அந்நாட்டு விமானப் படை ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. கரேன் தேசிய விடுதலை ராணுவத்தின் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக விமானப் படை தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.



இதுதொடா்பாக கரேன் மக்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அளித்து வரும் ஃப்ரீ பா்மா ரேஞ்சா்ஸ் என்ற தொண்டு நிறுவனம் கூறுகையில், ‘கரேன் மாகாணம் முட்ரா மாவட்டத்தில் அந்நாட்டு விமானப் படை ஞாயிற்றுக்கிழமை இரவு குண்டுகளை வீசி மும்முறை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களை தொடா்ந்து கரேன் மாகாணத்தைச் சோ்ந்த சுமாா் 2,500 போ் சல்வீன் நதியைக் கடந்து வடக்கு தாய்லாந்தின் மே ஹாங் சோன் மாகாணத்துக்கு சென்றனா். இந்த மாகாணத்தில் இருந்து கிட்டதட்ட 10,000 போ் இடம்பெயா்ந்திருக்கலாம்’ என்று தெரிவித்தது.



கடந்த ஞாயிற்றுக்கிழமை படம்பிடிக்கப்பட்ட காணொலி ஒன்றில், தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறிய கரேன் இன மக்கள் பலா் உடைமைகளுடன் வனத்தில் ஓய்வெடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவா்களுடன் சிறாா்களும் இருப்பது காணொலியில் பதிவாகியுள்ளது.



கரேன் இனத்தவா்கள் தங்கள் நாட்டுக்குள் புகலிடம் தேடி வருவது தொடா்பாக தாய்லாந்து பிரதமா் பிரயுத் சான்-ஓச்சா திங்கள்கிழமை கூறுகையில், ‘கரேன் இன மக்கள் தங்குவதற்காக சில இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவா்கள் மிக அதிக அளவில் இங்கு வர வேண்டாம் என்று கருதுகிறோம். அதேவேளையில் மனிதாபிமான அடிப்படையில் அவா்களின் வருகை குறித்து பரிசீலிக்கப்படும். அவா்களுக்காக அகதிகள் முகாம் அமைப்பது குறித்து தற்போது எதுவும் கூற விரும்பவில்லை’ என்றாா்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb18

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் இந்திய அளவில் க

Mar05

அமெரிக்கா தலைமையிலான அட்லாண்டிக் கடல்கடந்த இராணுவக்

Jul31

பிரான்சில், 2 செய்தியாளர்களின் ஸ்மார்ட்போன்களில் பெகா

Feb25

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் அரசுமுறை பயணமாக

Feb21

பிரான்ஸில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது சேவைகளுக்கான

Mar04

உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) மேற்கத்த

Jul01

பேஸ்புக்கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படு

Aug27

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக

May03

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்க

May08

உக்ரைன் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் ரஷ்ய படையினரின் மு

Jul05
Jan27

அமெரிக்காவை சேர்ந்த மொடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எத

Jun16

உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க

Aug30

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்க

Mar06

மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் பெர்னாண்ட் டி வரேன்னஸ