More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மராட்டியத்தில் கொரோனாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்!
மராட்டியத்தில் கொரோனாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்!
Apr 11
மராட்டியத்தில் கொரோனாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்!

மராட்டியத்தில் கொரோனா 2-வது அலை விசுவரூபம் எடுத்து மக்களை வதைத்து வருகிறது. கடந்த புதன்கிழமை ஒரு நாள் பாதிப்பு 60 ஆயிரத்தை தொட்டு புதிய ஆதிக்கம் காட்டியது. இந்த நிலையில் கொடிய கொரோனா அரசியல், சினிமா பிரபலங்களையும் தாக்கி வருகிறது. அதன்படி நாந்தெட் மாவட்டம் தெக்லுர் சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராவ்சாகேப் அந்தபுர்கர் கடந்த மாதம் 19-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.



உடனே அவர் நாந்தெட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக 22-ந் தேதி மும்பை ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். 28-ந் தேதி எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு நீங்கியது.



ஆனால் தொடர்ந்து உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மாறாக நுரையீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.



இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆஸ்பத்திரியில் அவரது உயிர் பிரிந்தது. கொரோனா தொற்று நீங்கினாலும், அதன் தாக்கத்தால் உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளார். மரணம் அடைந்த ராவ்சாகேப் அந்தபுர்கர் எம்.எல்.ஏ.வுக்கு வயது 64. தெக்லுர் தொகுதியில் இருந்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருக்கு தாய், மனைவி, திருமணமான 2 மகள்கள், மகன் உள்ளனர். ராவ்சாகேப் அந்தபுர்கர் எம்.எல்.ஏ. மறைவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் நானா சாகேப் படோலே இரங்கல் தெரிவித்து உள்ளார்.



பண்டர்பூர்-மங்கல்வேதா தொகுதி தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. பாரத் பால்கே கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயிரிழந்ததும், இதனால் காலியான அந்த தொகுதிக்கு வருகிற 17-ந் தேதி இடைத்தேர்தல் நடப்பதும் குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb24

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள

Aug30

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் 

உலகம் முழுவதையும் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் த

Mar05

தனது செல்ல நாயுடன் உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள

Oct01

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருக

Jun18