More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் - மியான்மர் ராணுவத்துக்கு இந்தியா கண்டனம்
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் - மியான்மர் ராணுவத்துக்கு இந்தியா கண்டனம்
Apr 03
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் - மியான்மர் ராணுவத்துக்கு இந்தியா கண்டனம்

மியான்மர் நாட்டில் ஜனநாயக ஆட்சியை கடந்த பிப்ரவரி 1-ந்தேதி ராணுவம் கவிழ்த்து விட்டு அதிகாரத்தை கைப்பற்றியது.



அந்நாட்டின் தலைவர் ஆங்சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை ஒடுக்க ராணுவம் துப்பாக்கி சூடு உள்ளிட்ட அடக்கு முறைகளை கையாண்டு வருகிறது.



500-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



இதனால் மியான்மர் ராணுவத்துக்கு ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளார்.



இந்த நிலையில் மியான்மரில் ராணுவத்தால் நடக்கும் வன்முறைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது:-



மியான்மர் நாட்டில் நடத்தப்படும் எந்தவொரு வன்முறைக்கும் இந்தியா கண்டனம் தெரிவித்து கொள்கிறது. அங்கு சட்டத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்பட்டு ஜனநாயகம் மீண்டும் தழைக்க வேண்டும். அங்கு கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களை விடுவிக்க வேண்டும்.



மியான்மரில் தற்போது நிலவும் சூழலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளை கொண்ட ஆசி யான் அமைப்பின் நடவடிக்கைகள் உள்பட அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. இதில் சர்வதேச நாடுகளுடனும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுடனும் இந்தியா தொடர்பில் இருந்து வருகிறது.



இவ்வாறு அவர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar24

துபாயில் பொதுமக்கள் மத்தியில் இதயநோய் குறித்த விழிப்

Mar07

ரஷிய படைகளின் தாக்குதல்கள் உக்ரைனில் நேற்று 11-வது நாளா

Jun08

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம்

Aug31

ஆஸ்திரேலியாவில் நேற்று ஒரே நாளில் 1,305 பேருக்கு புதிதாக

Mar04

தங்கள் நாட்டுக்குள் ஊடுருவிய ரஷ்ய வீரர் ஒருவருக்கு தே

Feb01

மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்

Mar13

ரஷ்யாவுடனான போரில் இதுவரை 1300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந

May10

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மே

Feb04

ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு

Aug11

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Dec28

தன்னை விமர்சித்து கட்டுரை எழுதிய பெண் நிருபரை, அமெரிக

May25

அமெரிக்காவில் உள்ள மின்னபோலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே 25

Oct28

அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்

Mar09

நேட்டோ அமைப்பில் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உ

Mar24

உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் நி