More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • டெல்லியில் வார இறுதி ஊரடங்கு அமல் - போலீசார் தீவிர கண்காணிப்பு!
டெல்லியில் வார இறுதி ஊரடங்கு அமல் - போலீசார் தீவிர கண்காணிப்பு!
Apr 18
டெல்லியில் வார இறுதி ஊரடங்கு அமல் - போலீசார் தீவிர கண்காணிப்பு!

இந்தியா முழுவதும் கொரோனாவின் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தொற்று பெருத்த பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

 



தலைநகர் டெல்லியை பொறுத்தவரை புதிய உச்சத்தை தினந்தோறும் தொற்று ஏற்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் இதுவரை இல்லாத அளவாக 19 ஆயிரத்து 486 பேர் பாதிக்கப்பட்டும், 141 பேர் உயிரிழந்தும் இருந்தனர்.



இதனால் மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசு முடிவு செய்தது. குறிப்பாக தொற்று சங்கிலியை உடைத்து பரவலை கட்டுப்படுத்துவதற்காக வார இறுதி ஊரடங்கை அமல்படுத்த ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டது. இந்த ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.



இதையொட்டி டெல்லியில் நேற்று முன்தினம் இரவு 10 மணியில் இருந்தே மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கினர். அத்தியாவசிய தேவையை தவிர வேறு எந்த தேவைக்கும் அவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.



இதைப்போல அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை தவிர வேறு எந்த வாகனமும் இயங்கவில்லை. சந்தைகளிலும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர வேறு எந்த கடைகளும் இயங்கவில்லை.



ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மளிகை, பழங்கள் மற்றும் காய்கறிகள் வாங்குதல், தடுப்பூசி போடுதல் போன்ற அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு செல்வோருக்கு இ-பாஸ் முறையை அரசும், போலீசாரும் வழங்கியிருந்தனர். பொது போக்குவரத்து, மெட்ரோ ரெயில்கள் அனைத்தும் குறைவான பயணிகளுடன் இயக்கப்பட்டன.



இந்த ஊரடங்கையொட்டி மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பல இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து மக்கள் நடமாட்டத்தை அவர்கள் கண்காணித்தனர்.



வார இறுதி ஊரடங்கின்போது சரியான காரணங்கள் இன்றி வெளியே செல்லும் மக்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனால் மக்கள் நடமாட்டம் நேற்று தலைநகரில் குறைந்திருந்தது. இந்த ஊரடங்கு நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணி வரை நீடிக்கும்.



இது குறித்து முதல்-மந்திரி கெஜ்ரிவால் தனது டுவிட்டர் தளத்தில், ‘கொரோனா காரணமாக டெல்லியில் இன்றும் (நேற்று), நாளையும் (இன்று) ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தயவுசெய்து இதை கடைப்பிடியுங்கள். நாம் இணைந்து கொரோனாவை வெற்றி கொள்வோம்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep21

இலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள

Feb02

இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி

Aug27

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற

Aug24

ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் போலீசாரும், பாதுகாப

Feb25

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் த

Jan31

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சே

Aug21