More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • புகுஷிமா அணு உலை கழிவு நீரை கடலில் திறந்துவிட ஜப்பான் முடிவு!
புகுஷிமா அணு உலை கழிவு நீரை கடலில் திறந்துவிட ஜப்பான் முடிவு!
Apr 14
புகுஷிமா அணு உலை கழிவு நீரை கடலில் திறந்துவிட ஜப்பான் முடிவு!

ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி ரிக்டர் அளவுகோலில் 9.0 புள்ளிகள் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு சுனாமி தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.‌



மேலும் உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது.



மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்ததால் உலைகளை குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது. இதனால் 6 யூனிட்களில்3 யூனிட்கள்சேதம் அடைந்தன. இதனால்சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கியது.



1986-ம் ஆண்டு ரஷியாவில் ஏற்பட்டசெர்னோபில் அணு உலை விபத்தை தொடர்ந்து உலகிலேயே 2-வது மிகப்பெரிய அணுஉலை விபத்தாக வரலாற்றில் இது பதிவானது.



10 ஆண்டுகள் கடந்தும் மக்கள் வசிக்க முடியாத அளவிற்குகதிர்வீச்சின் தாக்கத்தை இன்னமும் கக்கி கொண்டிருக்கிறது அந்த உலை.



இதனிடையே புகுஷிமா அணு உலையில் உள்ள அணு கழிவுகளை பாதுகாப்பாக அகற்றிவிட்டு அந்த அணுஉலையை முழுமையாக செயலிழக்கச் செய்யும் பணிகளில் டெப்கோ என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது.



அந்தவகையில் புகுஷிமா அணு உலையில் அணு கழிவுகள் நிறைந்த சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் டன் கழிவு நீர் முற்றிலுமாக சுத்திகரிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொட்டிகளில் பாதுகாப்பாக சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.



இந்த நிலையில் அணு கழிவுகள் அகற்றப்பட்ட இந்த கழிவு நீரை கடலில் திறந்து விட ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. 2022-ம் ஆண்டுக்குள் அணு உலையின் கழிவு நீரை கடலில் விடும் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து யோஷிஹைட் சுகா கூறுகையில், “அணுக்கழிவுகளை கடலில் வெளியேற்றுவது இன்றிமையாத பணி. இது ஓரிரு நாளில் முடியக்கூடியது அல்ல. பல ஆண்டுகள் பணி. அப்போதுதான் புகுஷிமா அணு உலையை முழுமையாக செயலிழக்கச் செய்ய முடியும். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின்னரே கழிவுநீரை அப்புறப்படுத்தும் பணி தொடங்கும்” என கூறினார்.



இதனிடையே அணு உலையின் கழிவு நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பான் அரசின் முடிவுக்கு சர்வதேச அணுசக்தி முகமை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதேபோல் ஜப்பானின் இந்த முடிவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைபிடித்து ஜப்பான் இந்த பணிகளை மேற்கொள்ளும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.



அதேசமயம் ஜப்பான் அரசின் இந்த முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்புஉள்ளூர் மீனவர்களும், அந்த நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அணு உலையின் கழிவு நீரை கடலில் கலந்தால் அது கடல் வளத்தை முற்றிலுமாக அழிக்க வாய்ப்புள்ளது என்றும் மேலும் அது மனித மரபணுவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கிரீன்பீஸ் என்கிற சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்துள்ளது.



அதேபோல் சீனா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளும் ஜப்பான் அரசின் இந்த முடிவை கடுமையாக எதிர்த்துள்ளன.



இந்த முடிவு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று எனவும், எனவே இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் ஜப்பானைப் அந்த இரு நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr16

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக,

Sep28

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சீக்கிய பெற்றோருக்குப

Feb21

பிரான்ஸில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது சேவைகளுக்கான

Jun24

விண்வெளி திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகிற சீனா, தற்ப

Jun17

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்

Aug26

ஆப்கானிஸ்தானில் உள்ள தமது பிரஜைகளுக்கு, அமெரிக்காவும

Mar23

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அடிக்கடி நடந

Jun16

நேட்டோ என்று அழைக்கப்படும் ‘வடக்கு அட்லாண்டிக் ஒப்ப

May29

கடந்த ஏழு தசாப்தங்களாக தொடரும் தமிழ் மக்கள் மீதான இன அ

Mar04

கொரோனா வைரஸ் பரவல், உலகுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே

Apr11

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, நெருப்பு வளையம் எ

Feb26

உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக சீனா விளங்குகி

Sep04

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய

Mar05

வவுனியாவினை சொந்த இடமாகக் கொண்ட 39 வயதுடைய மலர்விழி என்

Nov21

சோமாலிய பிரபல ஊடகவியலாளர் ஒருவர் அந்த நாட்டு தலைநகர்