More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பள்ளிவாசல்களுக்கு விசேட அறிவித்தல்!
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பள்ளிவாசல்களுக்கு விசேட அறிவித்தல்!
Apr 30
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பள்ளிவாசல்களுக்கு விசேட அறிவித்தல்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பள்ளிவாசல்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.



இதன்படி, சகல பள்ளிவாசல்களிலும் தராவீஹ் மற்றும் ஜும்ஆ தொழுகை உள்ளிட்ட ஏனைய கூட்டுப் பிராத்தனை நிகழ்வுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.



அத்துடன் அதே வேளை தொழுகை நேரங்களில் பள்ளிவாசல்களில் அதிகபட்சம் 25 பேர் மாத்திரமே இருக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது



மேலும் தொழுகைக்காக வருகை தரும் சந்தர்ப்பங்களில் விரிப்புகளைக் கொண்டு வருமாறும் வீடுகளிலேயே தொழுகை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பள்ளிவாசல்கள் மூடப்பட வேண்டும் எனவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.



மேலும் சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினாலும் வக்பு சபையினாலும் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.



இந்த நிலையில் குறித்த விடயங்களை பின்பற்றுவதற்கு நடைமுறை சிக்கல்கள் காணப்படுமாயின் பள்ளிவாசல்களை மூடுவதற்கு உரிய நிர்வாகத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.



இதன்படி    சகல பள்ளிவாசல்களிலும்  தராவிஹ்,ஜும்மா தொழுகை  மற்றும் பயான்கள்  கியாமுல் லைல், இஹ்திகாப்,  தவ்பா போன்ற அனைத்து கூட்டுத் செயற்பாடுகளையும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்த முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



இது தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ பி எம் அஷ்ரப்   சகல பள்ளிவாசல் நம்பிக்கையாளர் களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun18

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக

Jan26

மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிச

Aug16

கொவிட் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாட

Jan23

இரண்டாவது கொரோனா தொ்றறாளர் மரணம் நேற்று பதிவாகியுள்ள

Jan30

வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையா

Feb01

டொலர் நெருக்கடியால் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியு

Feb17

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர்

Sep21

நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவையாளர்களுக்கு மா

Sep26

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமுல்படுத்த வேண்

Jan19

இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்

Aug07

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு

Oct18

பால்மா விலைக்குறைப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எ

Oct08

பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் ந

Sep16

இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவி

Jul28

தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நில