More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொரோனா காரணமாக நாடு விரைவில் பேரழிவை எதிர்கொள்ளக்கூடும் : மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!
கொரோனா காரணமாக நாடு விரைவில் பேரழிவை எதிர்கொள்ளக்கூடும் : மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!
May 09
கொரோனா காரணமாக நாடு விரைவில் பேரழிவை எதிர்கொள்ளக்கூடும் : மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

கோவிட் காரணமாக எதிர்ப்பார்க்காத அளவில் பாரிய விகிதாசாரத்தில் நாடு விரைவில் பேரழிவை எதிர்கொள்ளக்கூடும். அத்துடன் யாருக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் கட்டாயம் ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.



இலங்கை மருத்துவ சங்கம், அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம், மருத்துவ நிபுணர்கள் சங்கம் உட்பட்ட அமைப்புகள் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளன.



அதில் கோவிட் காரணமாக எதிர்பார்க்காத மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். அது எதிர்காலத்தில் உண்மையான அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.



கோவிட் நோயாளிகளால் அனைத்து சுகாதாரத்துறை கட்டில்கள் மற்றும் சுகாதார வசதிகளின் பயன்பாடுகள் அதிகரித்து செல்கின்றன. தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் மருத்துவமனை கட்டில்களுக்காக நோயாளிகள் காத்திருக்கும்போது ஒக்சிசனின் தேவைப்பாடும் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.



சிகிச்சைக்காக வீட்டில் காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், உண்மையில் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கைகள் மற்றும் அவர்களை பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க தாமதங்கள் இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.



இத்தகைய சூழலில், அடுத்த மூன்று வாரங்களில் இறப்புகளின் அதிகரிப்பை தவிர்க்க முடியாது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



எனவே மருத்துவமனைகளில் அதிக வசதிகளை ஏற்படுத்துவதும் நாட்டு மக்களில் குறைந்தது 60 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகளை செலுத்துதும் அவசியம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.



இந்தப் பின்னணியில் அவசரமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு மருத்துவ நிபுணர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.



2020, அக்டோபர் இல் வெளியிடப்பட்ட கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட அரச வர்த்தமானி அறிவிப்பை மிகக் கடுமையாக அமுல்படுத்துவதன் மூலம் மக்களின் இயக்கங்களுக்கு கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும்.



வீடுகளில் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்படுவதை கண்காணிக்க உரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். கட்டில்கள், ஒக்சிசன் மற்றும் அதிதீவிர சிகிச்சை வசதிகளை வழங்குவதன் மூலம் நோய் தீர்க்கும் துறையை வலுப்படுத்தவேண்டும்.



பி.சி.ஆர் சோதனை மூலம் கோவிட் தொற்றை கண்டறிவதற்கும், நிலையான மற்றும் தடையற்ற விநியோகச் சங்கிலியை உறுதி செய்வதற்கும் நாடு முழுவதும் ஆய்வக சேவைகளை பலப்படுத்த வேண்டும்.



அரசாங்கம் இப்போது செயல்படவில்லை என்றால், அது எதிர்காலத்தில் பொது மக்களுக்கு இன்னும் கடுமையான மற்றும் நீடித்த கஷ்டங்களை ஏற்படுத்தும் என்றும் மருத்துவ நிபுணர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.



(Tw)



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar29

முல்லைத்தீவில் மாணவர் ஒருவர் காணாமல்போட்யுள்ள நிலைய

Jan28

இலங்கையை கடுமையாக சாடும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணை

Feb24

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக

Mar18

கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்கள

Mar25

இலங்கையின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் மீது பாலியல் கு

Oct17

இராணுவத்தால் நடத்தப்படும் 'புனர்வாழ்வு' மையங்களில

Mar09

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியார் காலமாகியுள்ள

Jan18

யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட

Apr02

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன

Mar01

நியாயமற்ற வரிவிதிப்பு மற்றும் அரசின் தன்னிச்சையான நட

Sep24

பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடிய

May22

நாட்டில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் மலைய

May11

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் அரசியல் ஸ்திரத

Feb23

இலங்கையின் கட்சிகள் பெறும் வாக்குகளின் வீதம் தொடர்பி

Jul08

அலாவுதீனின் அற்புத விளக்கு போன்றே பஸில் ராஜபக்சவின் ந