More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • 10கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வரையில் முடக்கப்பட்டுள்ளன!
10கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வரையில் முடக்கப்பட்டுள்ளன!
May 17
10கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வரையில் முடக்கப்பட்டுள்ளன!

பொகவந்தலாவ பொதுசுகாதார பிரிவுக்குட்பட்ட 10கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வரையில் முடக்கப்பட்டுள்ளன..இந்த தகவலை பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி எல்.பி.டி.பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.



பொகவந்தலாவ பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றமையால்16.05.2021.ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.



பொகவந்தலாவ பொதுசுகாதர பிரிவுக்குட்ட பகுதியில் இன்றைய தினம் மாத்திரம் 43 தொற்றாளர்கள் இனங்காணப் பட்டுள்ளதோடு பொகவந்தலாவ ஆரியபுர பகுதியில் ஒரே குடும்பத்தில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் அதில் உயிரிழந்த பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பெண்ணின் கணவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாகவும் குறித்த நபருக்கும் பி.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொண்டு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.



குறித்த பகுதியில் கொரேனா தொற்று அதிகரித்துள்ளமையால் 319ஜி, இன்ஜஸ்ரீ319எல், ஆரியபுர ஸ்ரீபுர319எப், கொட்டியாகலை319பி, என்பில்ட்319ஜ, டில்லரி319எம், கெம்பியன்319ஓ, வெஞ்சர்320எல்,டிக்கோயா தெற்கு,பொகவானை என், ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சுயதனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக முடக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.



தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் போக்குவரத்து, மற்றும் வர்த்தக நிலையங்கள், மதுபானசாலைகள் திறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்திற்கு வெளி பிரதேசத்தில் இருந்து உள்வருவதற்கோ தனிமைப்படுத்த படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வெளி செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.



இதுவரையிலும் பொகவந்தலாவ பொது சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் மாத்திரம் 332 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb26

யாழ்.புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்துக்கு நூல

Jul20

எதிரணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள வலுசக்தி அமைச்சர்

Apr08

கொழும்பிற்கு வருகை தருவோருக்கு பொலிஸார் விசேட அறிவுற

Sep08

கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால

Apr16

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதுடைய

May29

கேகாலை- எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்கு உட்பட்ட எட

Jan22

கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் அனைத்து பக்க விளைவுகளை

Oct05

முல்லைத்தீவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கட

Jan23

நாட்டின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வ

Sep19

மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தி

Oct15

இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் க

Mar28

லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதி

Jul15

வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் ஓ

Apr30

வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளு

Sep27

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமா