நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்ர் நாமல்ராஜபக்ஷ அவர்களின் சிந்தனையின் கீழ், இலங்கை இளைஞர்கழக சம்மேளன உறுப்பினர்களின் நெறிப்படுத்தலில், நாட்டின் உள்ள ஒவ்வோர் பிரதேச இளைஞர் கழகசம்மேளனத்தினால் , கொரோனா தடுப்பு நிலையங்களுக்கு கட்டில்கள் செய்து வழங்கும் செயற்திட்டம் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலக பிரிவில் 50 கட்டில்கள் உருவாக்கும் பணி 16/05/2021 அன்று நிறைவடைந்து போதிலும் 19/05/2021 இன்று வைபவரீதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் முன்னாள் வன்னி மாகாண பணிப்பாளர் முனவ்வர் , மற்றும் மன்னார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி பூலோகராசா, பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகளான சைமன் சில்வா,(முசலி பிரதேசம் ) துஷ்யந் குரூஸ் (மடு பிரதேசம் ) நிமலதர்சன் (நானாட்டான் பிரதேசம் ) மாந்தை இளைஞர் சேவை அதிகாரி ராகவன் மற்றும் மன்னார் நகர பிரதேச அதிகாரி இம்பாறன், மன்னார் மாவட்டத்தின் தேசிய சம்மேளன பிரதிநிதி ஹட்சன், மன்னார் பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோச் ஆகியோர் கலந்து கொண்டனர்

