More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கொரோனாவுக்கு பலியான இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி!
கொரோனாவுக்கு பலியான இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி!
May 14
கொரோனாவுக்கு பலியான இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி!

1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியில் அங்கம் வகித்த வீரர்களான ரவிந்தர் பால்சிங் (வயது 62), எம்.கே.கவுசிக் (வயது 66) ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு முறையே லக்னோ மற்றும் டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர்.



கொரோனாவுக்கு பலியான இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர்களான ரவிந்தர் பால்சிங் மற்றும் கவுசிக்கின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ நேற்று அறிவித்தார்.



இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘ஆக்கியில் சிறந்து விளங்கிய ரவிந்தர் பால்சிங், கவுசிக் ஆகியோரை நாம் இழந்து இருக்கிறோம். அவர்கள் இந்திய விளையாட்டுக்கு அளித்த பங்களிப்பு எப்போதும் நினைவில் கொள்ளப்படும். அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். இந்த துயரமான நேரத்தில் அவர்களது குடும்பத்துடன் நாம் துணை நிற்போம்’ என்று கூறியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May15

இலங்கைக்கு இந்த ஆண்டுக்கான யால பருவத்திற்கு உரம் வழங்

Dec21

அ.தி.மு.க. சார்பில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஏழைகளின

Aug31

ஆகாஷ் எஸ் ஏவுகணை மற்றும் துருவ் மார்க் - 3 என்ற அதிநவீன இ

Jul21

இறைவனின் நேசத்துக்கு உரியவராக வர்ணிக்கப்பட்டவர் இப்

Mar15

தமிகழத்தில் இறந்து போன தம்பியின் ஆசையை நிறைவேற்ற, ஐந்

Jan14

இந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள கதிர்வேல் சந்திய

Sep06

சட்டசபையில் இன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய

Apr22

உள்ளாட்சி அமைப்புகளுக்கென தனி இணை அறிக்கை வெளியிட வேண

Aug11

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நா

Jul15

கிழக்கு லடாக்கில் பல இடங்களில் எல்லை கோட்டை தாண்டி சீ

Mar15

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்

Apr24

ஐரோப்பிய ஆணைய தலைவர் ஏப்ரல் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்

Sep10

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் டாக்டர் இந்திரா (வயது 60). இவர

Dec12

விருப்பமில்லாத திருமணத்தால் கணவரை கூலிப்படையை ஏவி கொ

Feb02

விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க டெல்லியில் தடுப்ப