More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் உரிமை நாட்டுமக்கள் அனைவருக்கும் உள்ளது – ரவி குமுதேஷ்
தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் உரிமை நாட்டுமக்கள் அனைவருக்கும் உள்ளது – ரவி குமுதேஷ்
May 26
தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் உரிமை நாட்டுமக்கள் அனைவருக்கும் உள்ளது – ரவி குமுதேஷ்

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை நாட்டுமக்கள் அனைவருக்கும் உள்ளது என்று மருத்துவ ஆய்வுகூட சேவை தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் வலியுறுத்தியுள்ளார்.



கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



அங்கு அவர் மேலும் கூறியதாவது,



தற்போது சுகாதார அமைச்சின் செயற்பாடுகள், கொள்கை ரீதியான தீர்மானங்கள், நாட்டை முடக்குதல் ஆகிய விடயங்கள் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளன. அதன் விளைவுகளில் ஒன்றாக வசதிவாய்ப்புள்ளவர்களே தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையொன்று உருவாகியுள்ளது.



நாடளாவிய ரீதியில் வைத்திய அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது உண்மையில் சுகாதார அமைச்சில் உள்ள குறைபாடாகும்.



ஏனெனில் இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை நாட்டுமக்கள் அனைவருக்கும் உள்ளது. வரையறுக்கப்பட்ட தடுப்பூசிகளே உள்ள நிலையில், அதனை யாருக்கு வழங்குவதெனத் தீர்மானிக்கும்போது யாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்ற அடிப்படையில் உரிய செயற்திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.



தடுப்பூசிக்கான அவசியத்தேவையுடைய பல முன்னரங்க ஊழியர்கள் இருக்கின்றார்கள் என்பதை மனதில்கொள்ளவேண்டும். எனவே மருத்துவப்பணியாளர்கள் வேலைநிறுத்தத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் அனைத்திற்கும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியே பொறுப்புக்கூறவேண்டும் என தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun18

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க

Mar22

இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு தொகுதி அஸ்ட்ராசெனகா க

Mar08

ஜனாதிபதியின் மனைவியான பேராசிரியர் மைத்தி

Jul26

உபெக்ஷா சுவர்ணமாலி.

இலங்கையின் பிரபல நடிகைய

May14

நாடு பூராகவும் முழுமையான பயணத்தடை இன்று (14.05) முதல் அமுல

Feb04

மத்திய மலை நாட்டிலுள்ள விக்டோரியா உட்பட பல முக்கிய நீ

May03

காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தை சீர்கு

Dec17

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத

Mar08

 பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்

Feb20

அராலி, யாழ்ப்பாண கல்லூரி மைதானத்திற்கு அருகில் இடம்பெ

Feb13

அடுத்த சிறுபோக பயிர் செய்கையின் போது விவசாயிகளுக்கு உ

Aug10

ரிஷாட் பதியுதீனை அவருக்கு எதிரான வழக்கு நிறைவடையும் வ

Feb02

எதிர்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து பாதாள உலக நடவடிக

Feb04

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபத

Mar07

பண்டாரவளை - எலபெத்த கும்புர தகுன கெபிலேவெல பகுதியில் ப