More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சித்தூர் அருகே 2 குழந்தைகளை குட்டையில் வீசி கொன்று இளம்பெண் தற்கொலை!
சித்தூர் அருகே 2 குழந்தைகளை குட்டையில் வீசி கொன்று இளம்பெண் தற்கொலை!
May 26
சித்தூர் அருகே 2 குழந்தைகளை குட்டையில் வீசி கொன்று இளம்பெண் தற்கொலை!

சித்தூர் மாவட்டம், ராமச்சந்திரபுரம் அடுத்த சி.ராமபுரம் குட்டையில் அடையாளம் தெரியாத பெண், 2 குழந்தைகள் இறந்து கிடப்பதாக அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ராமச்சந்திரபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.



போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஸ்கூட்டர் ஒன்று இருந்தது.



ஸ்கூட்டரின் பதிவெண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தது பெனுமூர் அடுத்த குட்டியானம்பள்ளி கிராமத்தை சேர்ந்த கிஷோர் குமாரின் மனைவி நீரஜா மற்றும் அவரது குழந்தைகள் என்பது தெரியவந்தது.



கிஷோர்குமார், நீரஜா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சந்துரு என்ற மகனும், சைத்திரா என்ற மகளும் உள்ளனர்.



கடந்த 5 ஆண்டுக்கு முன்பு நீரஜாவின் பெற்றோர் இறந்ததால், கிஷோர் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் நீரஜாவிடம், தந்தை சொத்தை பிரித்து வாங்கி வரும்படி தொந்தரவு செய்தனர். இது தொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.



இதனால் மனமுடைந்த நீரஜா, குழந்தைகளை குட்டையில் தள்ளி கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.



இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr16

டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்ப

Jan14

இந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள கதிர்வேல் சந்திய

Apr12

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வரு

Jun23

கொரோனா தொற்று அலைகள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவ

Jul30

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு

Mar07

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அங்குள்ள

Jun18