More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மாரத்தான் வீரர்களை நிலைகுலைய வைத்த இயற்கை சீற்றம்... சீனாவில் 21 பேர் பலி!
மாரத்தான் வீரர்களை நிலைகுலைய வைத்த இயற்கை சீற்றம்... சீனாவில் 21 பேர் பலி!
May 23
மாரத்தான் வீரர்களை நிலைகுலைய வைத்த இயற்கை சீற்றம்... சீனாவில் 21 பேர் பலி!

சீனாவின் கன்சூ மாகாணம், பேயின் நகர் அருகே உள்ள சுற்றுலா தலத்தில் 100 கி.மீ. தொலைவுக்கான மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது.  இதில், 172 பேர் கலந்து கொண்டனர். மலைப்பகுதியை கடக்கும் சவால் நிறைந்த இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் ஆர்வத்துடன் தங்கள் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை மற்றும் பனி மழை பெய்தது. வெப்பநிலையும் கடுமையாக குறைந்தது.



திடீரென தாக்கிய இந்த தீவிர தட்பவெப்பநிலையால் வீரர்கள் தொடர்ந்து முன்னேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். சில வீரர்கள் போட்டி அமைப்பாளர்களுக்கு தகவல் அனுப்பினர்.



இதையடுத்து மீட்புக்குழுவினர் விரைந்து சென்று வீரர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மாரத்தான் போட்டி நிறுத்தப்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தின் தாக்கம் காரணமாக, 21 போட்டியாளர்கள் உயிரிழந்து உள்ளனர். மற்றவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களில் சிலரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.



பந்தய தூரத்தின் 20 கிலோ மீட்டரில் இருந்த 30 கிலோ மீட்டர் வரை திடீரென பேரழிவு தரும் வானிலை நிலவியதாகவும், குறுகிய நேரத்தில் ஆலங்கட்டி மழை மற்றும் பனி மழை பெய்ததால் வெப்பநிலை கடுமையாக குறைந்ததாகவும் பேயின் நகர மேயர் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar22

மரியுபோல் நகரில் சரணடைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை எ

Sep14

இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் போரிஸ் ஜான்

Feb02

உலகளவில் கொரோனாத் தொற்றினால்  அதிகளவில் பாதிக்கப்ப

May24

  உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலில் தற்போ

Sep04

இங்கிலாந்து 

உக்ரைனில் நடந்த சண்டையின் போது பிரான்ஸ் நாட்டவர் ஒருவ

Apr04

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கொரோனா தொற்ற

Sep28

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சீக்கிய பெற்றோருக்குப

Apr22

அமெரிக்காவின் ஒகியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் நேற்று மு

Jan12

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக கறுப்பினப் பெண் உரு

May18

ரஷ்யாவின் சர்வாதிகார போக்கை தெரியப்படுத்த புதிய சார்

Jun28

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில்  கடந்த ஆண்டு உரையாற்றி

Sep05

இந்தியா - அமெரிக்க வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை

Apr11

இந்திய ராணுவ தளபதி நரவானேக்கு வங்காளதேச தளபதி அசிஸ் அ

Sep24

ஈரான் ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை கொடுத்து உதவியத