More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞனை மடக்கி பிடித்த ஊர் மக்கள்!
திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞனை மடக்கி பிடித்த ஊர் மக்கள்!
May 23
திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞனை மடக்கி பிடித்த ஊர் மக்கள்!

மன்னார் மூர்வீதி,குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடுகளில் நீண்ட நாட்களாக திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (22) மாலை அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் திருட முற்பட்ட போது அப்பகுதி இளைஞர்களினால் மடக்கி பிடிக்கப்பட்டார்.



குறித்த பகுதியில் உள்ள வீடுகளில் தொடர்ச்சியாக கோழிகள் திருட்டுப் போவதோடு, வீடுகளில் உள்ள துவிச்சக்கர வண்டிகள் உட்பட பெறுமதியான பொருட்கள் நாளாந்தம் திருட்டு போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

திருட்டுச் சம்பவத்துடன் ஈடுபடும் குறித்த இளைஞனை மன்னார் காவற்துறையினர் கைது செய்தாலும் உடனடியாக குறித்த நபரை விடுவித்து விடுவதாக அப்பிரதேச மக்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.





இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை -மன்னார் மூர்வீதி,குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருட முற்பட்ட போது அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து குறித்த திருட்டில் ஈடுபட்ட நபரை   பிடித்து கட்டி வைத்தனர்.



பின்னர் காவற்துறை அவசர தொலைபேசிக்கு 119 தொடர்பை ஏற்படுத்திய போது 2காவற்துறையினர் வருகை தந்தனர். பின்னர் குறித்த நபரை மன்னார் காவற்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காவற்துறையினர் முறைப்பாடு செய்ய 4 பேரை மன்னார் காவல் நிலையத்திற்கு வருகை தர கோரி இருந்தனர்.

இந்த நிலையில் குறித்த  நபரை கைது செய்துகாவல் நிலையம் அழைத்துச் சென்று பின்னர் விடுவித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.





குறித்த பகுதிகளில் இரவு பகல் பாராது குறித்த இளைஞன் மற்றும் அவரது குழுவினரால் இப்பகுதியில் திருட்டுச் சம்பவம் இடம் பெற்று வருகின்ற போதும், குறித்த இளைஞன் பிடிக்கப்பட்டு காவற்துறையினரிடம் ஒப்படைக்கப் படுகின்ற போது காவற்துறையினர் குறித்த நபரை விடுவிப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb25

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறப்பு

Feb11

80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ எனப்படும் போதை

Mar10

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோறளைப்பற்று பிர

Jul17

கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி நேற்று மாலை முதல் 14

Feb03

நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப்

Oct20

ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செ

Jul04

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், கூட்டணியின் பங்காளி

Apr08

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று வீடு வாடகைக்கு த

Oct25

அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியை ஜனாதிபதி கோட்

Mar21

இரண்டு நாள் உத்தியோகவூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களா

Feb06

பொரளை சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவற

Mar26

மத்திய வங்கியின் இரண்டாம் பிணைமுறி மோசடி வழக்கில், மு

Jan23

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங

Jan24

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நீடி

Oct17

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை கடந்த ஒரு மாதத்தில் ஒ