More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • கொரோனா தோன்றியது எங்கே? - 90 நாளில் கண்டுபிடிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு!
கொரோனா தோன்றியது எங்கே? - 90 நாளில் கண்டுபிடிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு!
May 28
கொரோனா தோன்றியது எங்கே? - 90 நாளில் கண்டுபிடிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு!

உலகை இன்றளவும் கதிகலங்க வைத்துவரும் கொரோனா வைரஸ், 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது.



முதலில் இந்த வைரஸ் அந்த நகரத்தின் விலங்கு உணவுச்சந்தையில் இருந்து பரவியதாக கூறப்பட்டது.



பின்னர் உகான் ஆய்வுக்கூடத்தில் (வைராலஜி நிறுவனம்) இருந்து கசிய விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக அமெரிக்க முந்தைய ஜனாதிபதி டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தி அதிர வைத்தார்.



கொரோனா தோன்றியது எங்கே என்பது பற்றி ஆதாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.



இந்த நிலையில், உகான் ஆய்வுக்கூட ஆராய்ச்சியாளர்கள் பலரும் உடல்நலம் பாதித்து 2019 இறுதியில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதாக சமீபத்தில் அமெரிக்க உளவு அறிக்கையில் தகவல்கள் வெளியாகின.



இதனால் உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்து இந்த வைரஸ் கசிந்திருக்கலாம் என்ற ஊகம் மேலும் வலுத்துள்ளது. டிரம்பின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாகவும் இது அமைந்துள்ளது.



இதையடுத்து, கொரோனாவின் தோற்றம் எங்கே என்பதை உறுதியாகக் கண்டறிவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளார். “கொரோனா வைரசின் தோற்றம் தொடர்பான உறுதியான முடிவுக்கு வரத்தக்க வகையில், தகவல்களை சேகரித்து, ஆய்வு செய்வதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குங்கள்” என்று உளவு அமைப்புகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.



மேலும், இது தொடர்பாக உளவு அமைப்புகளுக்கு அவர் 90 நாள் கெடுவை விதித்துள்ளார்.



ஜோ பைடனின் இந்த அதிரடி நடவடிக்கை உலக அரங்கை உலுக்குவதாக அமைந்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb18

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே

Mar02

ரஷ்யா, உக்ரைனுக்கு இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்

Apr30

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், நேற்று டெல்ல

Jan17

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், முதல் 100 நாட்களில் 10 கோ

Mar25

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு மாதத்தை கடந்தது

Mar25

உக்ரைனுடனான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இர

Mar07

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத

May18

13 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மீண்டும் இரத்தம் பார்த

Jan25

எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை ஆதரிக்கும் எத

Mar23

மறைந்த ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சேட் அல் சேட்ட

Apr20

ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தனியார் செய்தி

Mar22

உலகளாவிய ரீதியில் தண்ணீர் நெருக்கடி அதிகரித்தல் மற்ற

Jul13
Jul17

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை

Mar06

வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள