More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் அரிதாகவே காணப்படுகிறது -ரொஷான் ரணசிங்க
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் அரிதாகவே காணப்படுகிறது -ரொஷான் ரணசிங்க
Jun 07
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் அரிதாகவே காணப்படுகிறது -ரொஷான் ரணசிங்க

மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான சாத்தியம் மிக அரிதாகவே காணப்படுகிறது. தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. ஆனால் தேர்தலை நடத்துவதற்கான பாதுகாப்பான சூழல் தற்போது காணப்படவில்லை. என உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.



அவர் மேலும் குறிப்பிடுகையில், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாகாணசபை தேர்தல் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பிற்போடப்பட்டது. பாரிய போராட்டங்களுக்கு மத்தியில் உள்ளுராட்சிமன்ற தேர்தல் கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகள் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் எதிராக காணப்பட்டது.



அரசியல் நோக்கத்திற்காக காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். மாகாண சபை தேர்தலை எத்தேர்தல் முறையில் அதாவது பழைய தேர்தல் முறையிலா அல்லது புதிய தேர்தல் முறையிலா நடத்துவது என்ற சிக்கல் நிலை காணப்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது என்ற நிலை காணப்பட்டது.



மாகாண சபை தேர்தலை தொடர்ந்து பிற்போட வேண்டும் என்ற தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது. ஆனால் அதற்கான பாதுகாப்பான சூழல் தற்போது கிடையாது. தேர்தலை நடத்துவதற்கான பாதுகாப்பான சூழல் காணப்படுகிறது. என சுகாதார தரப்பினர் குறிப்பிட்டால் தேர்தலை நடத்துவோம்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr03

12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் வில

Sep22

வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள

Nov12

விஸ்கி அருந்திக்கொண்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடுவ

Sep20

பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் உத்தியோகஸ்தர் ஒருவர்

Feb17

அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துள்ளது

Feb02

யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உட்பட 6 பேருக்கு

Jan30

அரசாங்கம் பயங்கரவாதச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர

Aug27

சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள

May31

இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் நுழ

Jan21

கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளி

May18

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின படு

Jun17

தங்களுடைய கோரிக்கையின்படியே வடகடலில் பேரூந்துகள் இற

Dec19

பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத

May16

வவுனியா, புளியங்குளம், புதுவிளாங்குளம் காட்டுப் பகுதி

Jan25

மன்னார்- சாவக்கட்டு கிராமத்திற்குள் நுழைந்த இளைஞர் கு