More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஜெப் பெசோசுடன் செல்ல விண்வெளி பயண இருக்கையை ரூ.205 கோடிக்கு ஏலம் எடுத்த நபர்!
ஜெப் பெசோசுடன் செல்ல விண்வெளி பயண இருக்கையை ரூ.205 கோடிக்கு ஏலம் எடுத்த நபர்!
Jun 14
ஜெப் பெசோசுடன் செல்ல விண்வெளி பயண இருக்கையை ரூ.205 கோடிக்கு ஏலம் எடுத்த நபர்!

உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ‌ஜெப்-பெசோஸ் புளூ ஆரிஜின் என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை கடந்த 2000-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.



மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் தனது முதல் விண்வெளிப் பயணமாக ஜூலை 20-ம் தேதி நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் விண்கலத்தை விண்ணில்  செலுத்துகிறது.



இதில் ஜெப்-பெசோஸ் தனது சகோதரர் மார்க்குடன் விண்வெளிக்கு பயணிக்கிறார். இந்தப் பயணத்தின்போது ஜெப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரருடன் மேலும் ஒருவர் இணையலாம் என்பதால் அந்த இருக்கையை புளூ ஆரிஜின் நிறுவனம் ஏலம் விட்டது.



சுமார் 140 நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இந்த ஏலத்தில் பங்கேற்றனர். ஒரு மாத காலமாக நடந்து வந்த ஏலத்தில் 5 மில்லியன் டாலருக்கும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.36 கோடியே 61 லட்சம்) குறைவாகவே ஏலம் கேட்கப்பட்டது.



இந்நிலையில், ஏலத்தின் கடைசி நாளான நேற்று முன்தினம் இந்தத் தொகை 5 மடங்காக உயர்ந்தது. அதன்படி ஜெப்-பெசோஸ் மற்றும் அவரது சகோதரருடன் விண்வெளி செல்வதற்கான இருக்கையை ஒருவர் 28 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.205 கோடி) ஏலம் கேட்டார். 



அதற்கு மேல் யாரும் ஏலம் கேட்காத நிலையில், அந்த இருக்கையை அவருக்கு ஒதுக்கி புளூ ஆரிஜின் நிறுவனம் ஏலத்தை முடித்து வைத்தது. ஆனாலும், ஏலம் எடுத்த நபரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct03

பிரேசில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்ட

Feb01

கொலம்பியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மக்களு

Mar29

உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போரில் உலக குத்துசண்டை வீ

Apr20

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெள

Feb05

மியன்மாரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான்

Jan07

எண்ணெய் வளமிக்க மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கார்களு

Jan19

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாண்டோங் மாகாணத்தில்

Oct26

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி பட

Mar01

சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரு

May20

ரஷ்ய ஜனாதிபதியான புடினுடைய மகள்,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ

Jan31

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டேவிஸ் நக

Oct08

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்

May17

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த வியாழக்கிழம

Mar19

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் 3 நாள் பயண

May20

கடந்த சில தினங்களுக்கு முன் அல் ஜசீரா ( Al Jazeera) செய்தி நிறு