More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றி இலங்கை நாடாளுமன்றமே முடிவெடுக்கும் – சரத் வீரசேகர
பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றி இலங்கை நாடாளுமன்றமே முடிவெடுக்கும் – சரத் வீரசேகர
Jun 14
பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றி இலங்கை நாடாளுமன்றமே முடிவெடுக்கும் – சரத் வீரசேகர

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்கும். அதனை வேறு எவரும் தீர்மானிக்க முடியாது.



என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.



இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். இல்லாவிடின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இரத்துச் செய்யவேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.



அவர் மேலும் தெரிவித்ததாவது:-



இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடன் இரத்துச் செய்ய வேண்டும் என்று அரசை வலியுறுத்துவதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது.



இலங்கையின் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன்தான் பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையிலுள்ளது. அதை நீக்குவதா? இல்லையா? என்பதை இலங்கை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும். அது தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் எடுக்க முடியாது.



நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கின்றபடியால்தான் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களையும், அதற்குத் துணைபோனவர்களையும் கைதுசெய்தோம் தற்போதும் கைதுசெய்து வருகின்றோம்.



இதேவேளை, இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை விலக்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஐரோப்பிய நாடாளுமன்றம் வலியுறுத்துவது ஒரு மனிதாபிமானமற்ற செயலாகும்.



சம்பந்தப்பட்ட தரப்புகள், இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை விலக்கிக்கொள்ள மாட்டார்கள் என்றே நாம் நம்புகின்றோம் – என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May26

இன்று விசாக பூரணை தினத்தை முன்னிட்டு 240 சிறைக் கைதிகள்

Oct10

அதிகாரங்களை மீறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலங்

Jan26

கம்பஹாவில் தனியார் தொலைபேசி நிறுவன ஊழியர்கள் 10 பேர் கொ

Aug05

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்த

May13

வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் 2 கொரோனா தொற்றாளர

Oct15

ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஜனாதிபதி திட்டம

Sep28

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானிலிருந்து இன்று பில

May25

கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு நாடாளு

Mar26

இலங்கை குறித்த தமது அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் (IMF)

Mar01

இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் லீற்றர்

Sep06

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையில் காணப்படும் குறைப

Sep12

பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரிரு நாட்கள

Aug14

இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ம

Mar06

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசிலிருந்து வெள

Jan15

மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த தனியார் பஸ் உரிமையா