More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அணு ஆயுத குவிப்பில் முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா? - பரபரப்பு தகவல்கள்
அணு ஆயுத குவிப்பில் முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா? - பரபரப்பு தகவல்கள்
Jun 16
அணு ஆயுத குவிப்பில் முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா? - பரபரப்பு தகவல்கள்

சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (எஸ்.ஐ.பி.ஆர்.ஐ.) பல்வேறு நாடுகளின் அணு ஆயுத குவிப்பு பற்றி விரிவாக ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தயாரித்து, அதை ‘எஸ்.ஐ.பி.ஆர்.ஐ. ஆண்டு புத்தகம் 2021’ என்ற தலைப்பில் வெளியிட்டு, உலக அரங்கை அலற வைத்திருக்கிறது. அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு



உலகின் 9 நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. அவை அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வட கொரியா ஆகும்.



* உலகளவில் குவிக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 80 ஆகும். இவற்றில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இரு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷியா வசமே உள்ளன.



கடந்த ஆண்டு ஜனவரி நிலவரப்படி சீனாவிடம் 320, பாகிஸ்தானிடம் 160, இந்தியாவிடம் 150 அணு ஆயுதங்கள் இருந்தன.



* சீனாவைப் பொறுத்தமட்டில் அது அணு ஆயுதங்களின் குறிப்பிடத்தக்க நவீனமயமாக்கல் மற்றும் ஆயுதங்கள குவிப்பின் நடுவில் உள்ளது.



* இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத இருப்பை விஸ்தரித்து வருவதாக தெரிகிறது.



* ரஷியாவிடம்தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் 6,375 அணு ஆயுதங்கள் உள்ளன. அதற்கு அடுத்த நிலையில் அமெரிக்கா (5,800) உள்ளது. இங்கிலாந்திடம் 225, பிரான்சிடம் 290, இஸ்ரேலிடம் 90, வடகொரியாவிடம் 40-50 அணு ஆயுதங்கள் இருக்கின்றன.



* சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய வல்லரசு நாடுகள் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் அல்லது பிரிக்கப்பட்ட புளூட்டோனியம் ஆகியவற்றையே தங்கள் அணு ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்துகின்றன.



* இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் ஏவுகணை சோதனைகள் பற்றி அறிக்கைகளை வெளியிடுகின்றன. ஆனால் அவற்றில் நிலை அல்லது அணு ஆயுதங்களின் அளவு பற்றி எந்த தகவலையும் அளிப்பதில்லை.



* உலகமெங்கும் உள்ள 13 ஆயிரத்து 80 அணு ஆயுதங்களில் 2,000 அணுகுண்டுகள், அதிக செயல்பாட்டு எச்சரிக்கையுடன் இருக்கின்றன.



* சவூதி அரேபியா, இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய 5 நாடுகள் 2016-20 ஆண்டுகள் இடையே அதிகளவிலான ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளன.



* சவூதி அரேபியா உலகளவிலான ஆயுத இறக்குமதியில் 11 சதவீதத்தையும், இந்தியா 9.5 சதவீதத்தையும் இந்த கால கட்டத்தில் செய்துள்ளன.



இவ்வாறு அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளன.



இந்த புத்தகத்தில் வெளியாகி உள்ள அணு ஆயுதங்கள் இருப்பு, ஆயுத இறக்குமதி, அணு ஆயுதங்களுக்கு கச்சாப்பொருளாக பயன்படுத்தப்படக்கூடிய பொருட்கள் பற்றிய தகவல்கள் உலக அரங்கை அதிர வைத்துள்ளன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr06

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசின் தலைநகர் வியன்டியனில்

Apr10

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட

Feb28

உக்ரைனின் முக்கிய நகரம் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட

Jan12

உலக அளவில் கோவிட் - 19  தினசரி பாதிப்பில் அமெரிக்கா உச்

Feb24

 

உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனத

May31

அமெரிக்காவின் டென்னசி மாகாணம் ரதர்போர்ட் நகரில் உள்ள

Jan29

அமெரிக்க நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரமான ஆஸ்

Aug23

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள

Mar27

உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷிய அதிபர் புதினை கட

Feb25

1990 ஆம் ஆண்டு சோவியத்தை தகர்த்தவர்கள் தங்கள் கனவு நிறைவ

Feb02

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) மனைவியும், மன

Apr17

இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான

Apr11

இந்திய ராணுவ தளபதி நரவானேக்கு வங்காளதேச தளபதி அசிஸ் அ

May03

உக்ரைனின் மரியுபோலில் இரும்பு ஆலைக்குள் தஞ்சமடைந்தி

Mar18

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக