More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 40 நாட்களுக்கு பிறகு இயக்க திட்டம்- தயார் நிலையில் மாநகர பஸ்கள்!
40 நாட்களுக்கு பிறகு இயக்க திட்டம்- தயார் நிலையில் மாநகர பஸ்கள்!
Jun 18
40 நாட்களுக்கு பிறகு இயக்க திட்டம்- தயார் நிலையில் மாநகர பஸ்கள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை கடந்த மாதம் முதல் வாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தொற்று பாதிப்பு மட்டுமின்றி உயிர் இழப்பும் அதிகரித்தது.



இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து மற்றும் மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. கடந்த மாதம் 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.



அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கையால் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஒரு சில மாவட்டங்களை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.



இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பஸ் போக்குவரத்தையும் கட்டுப்பாடுகளுடன் தொடங்குவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.



கொரோனா அதிகம் பாதித்துள்ள மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் நகர பஸ்களை மட்டும் முதலில் இயக்க அனுமதிக்க வாய்ப்பு உள்ளது. மாவட்டத்தில் இருந்து மாவட்டத்திற்கு பஸ் சேவை தொடங்கப்படுவது சற்று தள்ளி வைக்கலாம் என ஆலோசிக்கப்படுகிறது.

 



வருகிற 21-ந் தேதி (திங்கட்சிழமை) முதல் அனைத்து நகரங்களிலும் நகர பஸ்களை மட்டும் இயக்க அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னையில் மாநகர பஸ்களை இயக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மாநகர போக்குவரத்துக் கழகம் செய்து வருகிறது.



இதையும் படியுங்கள்...தமிழகம் மின் மிகை மாநிலம் அல்ல - அமைச்சர் செந்தில் பாலாஜி



கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி குறைந்த அளவில் பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் 50 சதவீத பஸ்களை இயக்கவும், அதில் 50 சதவீத இருக்கைகளில் பயணிகளை அனுமதிக்கவும் மாநகர போக்குவரத்து கழகம் தயாராகி உள்ளது.



மொத்தமுள்ள 3200 பஸ்களில் 250 பஸ்கள் தற்போது கொரோனா முன்களப்பணியாளர்களுக்காக இயக்கப்பட்டு வருகிறது. இது போக மேலும் 1000 பஸ்களை பல்வேறு வழித்தடங்களில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.



இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-



முதல் ஒரு வாரத்திற்கு 50 சதவீத பஸ்கள் இயக்கப்படும். அதன் பின்னர் பொதுமக்களின் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும். பஸ் நிறுத்தங்களிலும், பஸ்களிலும் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணிகளை அனுமதிக்கும் வகையில் மாநகர பஸ்கள் இயக்கப்படும்.



இதற்கான அறிவிப்பு நாளை (சனி) வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஓரிரு நாளில் அனைத்து பணிமனையில் உள்ள பஸ்களையும் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தும் பணி நடைபெறும்.



இது தவிர டிரைவர், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 24 ஆயிரம் ஊழியர்களில் 60 சதவீதம் பேருக்கு தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ளது.



இந்த 3 நாட்களில் கூடுதலாக முகாம்கள் அமைத்து ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது.



இவ்வாறு அவர்கள் கூறினர்.



சிறு கடைகள், தொழில் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால் வேலைக்கு செல்லக்கூடியவர்கள் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.



தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கார், ஆட்டோ, வேன்களில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசு பஸ்களை இயக்கினால் மட்டுமே ஏழை, எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும். கூலித் தொழிலாளர்களும் வேலைக்கு செல்ல முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.



அதனால் முதல்கட்டமாக 40 நாட்களுக்கு பிறகு மாநகர பஸ்களை மட்டும் இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் தயார் நிலையில் உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb15

சசிகலா மீண்டும் அதிமுகவிற்குள் வந்துவிடக்கூடாது என்

Jul26

பிக்பாஸ் பிரபலம் 

வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்

Sep20

தாம் உயிருக்கு உயிராக நேசிக்கும் அரசியல் தலைவர் அபிமா

Jul29

பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோ

Dec30

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவத

Oct13

2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து பெரியவர்க

May29

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள

Mar26

கொரோனா பரவலுக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி இன்ற

Feb24

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே

Jun19

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற ப

Mar20

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்க

Jun18

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனி விமானம் மூலம் இரண்

Sep26

கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 334 சத

Jan17

சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பகுதியில் தமிழர