More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஐவரி கோஸ்ட் நாட்டில் முன்னாள் பிரதமருக்கு ஆயுள் தண்டனை!
ஐவரி கோஸ்ட் நாட்டில் முன்னாள் பிரதமருக்கு ஆயுள் தண்டனை!
Jun 25
ஐவரி கோஸ்ட் நாட்டில் முன்னாள் பிரதமருக்கு ஆயுள் தண்டனை!

ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் 2007-12 கால கட்டத்தில் பிரதமர் பதவி வகித்தவர், குய்லூம் சோரோ (வயது 49).



இவர் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் தற்போது நாட்டை விட்டு ஓடி பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்.



இந்தநிலையில் இவர் மீதான வழக்கு விசாரணை அபித்ஜான் நகர கோர்ட்டில் நடந்து வந்தது. ஐவரிகோஸ்ட் அரசின் அமைப்புகளை இழிவுபடுத்தும் வகையில் போலி செய்திகளை பரப்பியதாகவும், வெளியிட்டதாகவும் அவர் மீதும், அவரது ஆதரவாளர்கள் 19 பேர் மீதும் வழக்கு விசாரணை நடைபெற்றது.



இந்தநிலையில் விசாரணை முடிவில் குய்லூம் சோரோ மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறிய கோர்ட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.



இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், இந்த தண்டனையை தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், இதை எதிர்த்துப்போராடப்போவதாகவும் அறிவித்துள்ளார். அவரது அரசியல் இயக்கத்தை கலைக்க உத்தரவிட்ட கோர்ட்டின் முடிவை அவர் விமர்சித்துள்ளார்.



அந்தப் பதிவில் அவர், “இந்த நியாயமற்ற தீர்ப்பை முழுமையாக நிராகரிக்கிறேன்” என கூறி உள்ளார்.



இவர் 2020-ல் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக 2019-ல் அறிவித்தார். ஆனால் அவர் போட்டியிட அனுமதி அளிக்கப்படவில்லை. அந்த தேர்தலில் தற்போதைய அதிபர் அலசேன் ஒட்டாரா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar12

கனடா நாட்டில் பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரத

Apr19

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரி

Feb11

அமெரிக்காவின் எதிரி நாடுகளான ரஷ்யா, ஈரான் மற்றும் சீன

Feb06

கொவிட்–19 நோயை உண்டாக்கும் கொரோனா வைரஸ் ஆய்வுக் கூடத்

Oct22

அடுத்த கன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான

Mar05

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எவ்வாறான பாதிப்புக

Jun06