More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பிலிப்பைன்சில் கொரோனா தடுப்பூசி போட மறுத்தால் சிறை தண்டனை - அதிபர் எச்சரிக்கை!
பிலிப்பைன்சில் கொரோனா தடுப்பூசி போட மறுத்தால் சிறை தண்டனை - அதிபர் எச்சரிக்கை!
Jun 23
பிலிப்பைன்சில் கொரோனா தடுப்பூசி போட மறுத்தால் சிறை தண்டனை - அதிபர் எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். சிறிய குற்றங்களுக்கும் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என்கிற சர்வாதிகார போக்கு மனம் உடையவர்.



அண்மையில் கூட கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தேவையின்றி வீதிகளில் சுற்றித்திரியும் நபர்களை சுட்டுக்கொல்ல போலீசாருக்கும், ராணுவத்துக்கும் அனுமதி வழங்கி நாட்டு மக்களை கதி கலங்க வைத்தார்.



அதன் தொடர்ச்சியாக தற்போது நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கும் நபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.



பிலிப்பைன்சில் இதுவரை 13 லட்சத்து 67 ஆயிரத்து 894 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 23 ஆயிரத்து 809 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.



அங்கு கொரோனா வைரஸ் 2-வது அலை உருவாகும் அபாய சூழல் உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.



ஆனால் 11 கோடி மக்கள் தொகை கொண்ட பிலிப்பைன்சில் இதுவரை 21 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



இந்த சூழலில்தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்களுக்கு சிறை தண்டனை என்கிற அறிவிப்பை அதிபர் ரோட்ரிகோ துதர்தே வெளியிட்டுள்ளார்‌. தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் கூறியதாவது:-



என்னை தவறாக எண்ணாதீர்கள். நாட்டில் ஒரு நெருக்கடி நிலவுகிறது. தேசிய அவசர நிலை உள்ளது. எனவே தடுப்பூசியா அல்லது சிறையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால் நான் உங்களை கைது செய்வேன். பின்னர் நானே உங்களுக்கு ஊசி போடுவேன். நீங்கள்‌ தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால் பிலிப்பைன்சை விட்டு வெளியேறுங்கள். இந்தியா அல்லது அமெரிக்கா எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். ஆனால் பிலிப்பைன்சில் இருந்தால் நீங்களே தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.‌



இவ்வாறு அவர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb27

இங்கிலாந்து நாட்டின் அரசி இரண்டாம் எலிசபெத் தனது கணவர

Nov04

பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொட

Sep14

ஆப்கானிஸ்தானின் பஞ்சீர் வெளியில் 20 பொதுமக்கள் வரை கொல

Sep17

விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் வர்த்தக ரீதியான முதல்

Mar16

ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா

Feb04

மியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய, ஐ.நா சபையால் என்ன

Feb13

லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டங்களை இரும்புக்கரம் கொண்ட

May10

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Jun09

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச

Jul25

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில

Apr05

ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் ஏப்ரல் 5

Aug18

தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து அந்

Jun15
Oct30

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95), கடந்த வாரம் வழக்

Mar20

உலகம் முழுவதும் 43 நிமிட முடக்கத்துக்கு பிறகு வாட்ஸ் அப