More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • கிம் ஜாங் அன் தோற்றத்தை கண்டு மனமுடைந்த வடகொரிய மக்கள்!
கிம் ஜாங் அன் தோற்றத்தை கண்டு மனமுடைந்த வடகொரிய மக்கள்!
Jun 29
கிம் ஜாங் அன் தோற்றத்தை கண்டு மனமுடைந்த வடகொரிய மக்கள்!

வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் உடல் நிலை குறித்து அண்மை காலமாக சர்வதேச இடங்களில் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.



கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய சமயத்தில் கிம் ஜாங் அன் பல மாதங்கள் வெளியுலகில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.



இதனால் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், இறந்து விட்டதாகவும் பல்வேறு தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் உலா வந்தன. எனினும் கிம் ஜாங் அன் சில மாதங்களுக்கு பின் பொதுவெளியில் தோன்றி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 



இந்த நிலையில் மீண்டும் சில மாதங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த கிம் ஜாங் அன், அண்மையில் ஆளும் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றார்.



இதையும் படியுங்கள்...இங்கிலாந்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - புதிதாக 22,868 பேருக்கு பாதிப்பு



அப்போது கிம் ஜாங் அன் வழக்கத்தை விடவும் மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்டார்.‌ இதனால் அவரது உடல்நிலை குறித்து சர்வதேச ஊடகங்களில் மீண்டும் பல்வேறு யூகங்கள் எழ தொடங்கி உள்ளன.



இந்த நிலையில் கிம் ஜாங் அன்னின் தற்போதைய தோற்றம் கண்டு மனமுடைந்த வடகொரிய மக்கள் அவரது உடல்நிலை குறித்து மிகுந்த கவலை கொண்டிருப்பதாக அந்த நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.



தனது அடையாளங்களை வெளியிட விரும்பாத வடகொரிய பிரஜை ஒருவர், “கிம்மின் தோற்றத்தை நாங்கள் பார்த்தபோது எங்கள் மக்களின் இதயம் மிகவும் வேதனை அடைந்தது. அவரை பார்க்கிறபோது இயற்கையாகவே தங்கள் கண்ணில் கண்ணீர் வழிவதாக எல்லோரும் கூறுகின்றனர்” என தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb17

சிங்கப்பூரில் இருக்கும் ஒரு மசாஜ் பார்லர் நடத்துனருக

Jun25

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, கென்யா. அந்த நாட்டின் 23 ராண

Dec27

தைவானை சுற்றி வளைத்து சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்ட

Mar07

ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ

Jan21

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட

Feb28

ரஷ்ய இராணுவத்தை எதிர்க்க, தேவைப்பட்டால் துப்பாக்கி உள

Mar06

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் ம

Jan31

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக க

Jun09

ஜப்பானில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர் தொடர்பான தகவல

Mar31

ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்

Oct25

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலத்திற்கு அடியில் ம

Jun08