More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கர்நாடகத்தில் 8 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை: சுகாதாரத்துறை தகவல்
கர்நாடகத்தில் 8 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை: சுகாதாரத்துறை தகவல்
Jun 26
கர்நாடகத்தில் 8 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை: சுகாதாரத்துறை தகவல்

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது



கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 58 ஆயிரத்து 72 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 3,310 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 26 ஆயிரத்து 754 ஆக அதிகரித்துள்ளது.



கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 114 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 539 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 6,524 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் மாநிலத்தில் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 84 ஆயிரத்து 997 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 195 ஆக குறைந்துள்ளது. பெங்களூரு நகரில் அதிகபட்சமாக 614 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



மைசூருவில் 367 பேர், தட்சிண கன்னடவில் 377 பேர், ஹாசனில் 399 பேர், குடகில் 183 பேர், மண்டியாவில் 119 பேர், சிவமொக்காவில் 212 பேர், கோலாரில் 140 பேர் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 22 மாவட்டங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு 100-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.



கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் பெங்களூரு நகரில் 17 பேரும், தட்சிண கன்னடவில் 14 பேரும், மைசூருவில் 22 பேரும், பல்லாரியில் 9 பேரும், தார்வாரில் 9 பேரும் என மொத்தம் 114 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 8 மாவட்ங்களில் புதிதாக யாரும் இறக்கவில்லை.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul25

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் மற்றும் லடாக் யூன

Jul28

முன்னாள் முதல்-மந்திரி 

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கி

Aug30

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் 

மும்பையில் இளம்பெண் கொலை வழக்கில் மகனை தந்தையே காட

Jun07

டெல்லியில், ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று வழங்கும

Feb11

சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை இந

Oct15

எல்லைப் பிரச்சனையில் சர்ச்சைக்குரிய இடங்களில் இருந்

Jun11

ஜிதின் பிரசாதாவுக்கு கொள்கை உறுதிப்பாட்டை விட தனிப்ப

Apr01

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக

May29

வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடு

Apr02

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் வர

Mar07

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் ந

May04

அமராவதி: ஆந்திராவில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி

Aug23