More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பிலிப்பைன்ஸில் கோரமான விமான விபத்து… 17 பேர் பலி; 40 பேர் படுகாயம்!
பிலிப்பைன்ஸில் கோரமான விமான விபத்து… 17 பேர் பலி; 40 பேர் படுகாயம்!
Jul 04
பிலிப்பைன்ஸில் கோரமான விமான விபத்து… 17 பேர் பலி; 40 பேர் படுகாயம்!

பிலிப்பைன்ஸில் 92 ராணுவ வீரர்களை அழைத்துச் சென்ற ராணுவ விமானம் விபத்தில் சிக்கியதால் 20 வீரர்கள் பலியாகியுள்ளனர். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். சி -130 ஹெர்குலஸ் என்ற பெயர் கொண்ட இந்த ராணுவ விமானம் 80க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை அழைத்துக் கொண்டு சுலு மாகாணத்திலுள்ள ஜோலோ தீவிற்கு பயணப்பட்டிருக்கும்போது இவ்விபத்து அரங்கேறியதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் டெல்ஃபின் லொரென்சானா கூறியிருக்கிறார்.



விமானம் ஓடுதளத்தை இறங்க முயன்றபோது ஓடுதளத்தை விட்டு விலகிச் சென்றுள்ளது. இதனால் விமானி மீண்டும் விமானத்தை மேலே உயர்த்த முயற்சிசெய்திருக்கிறார். ஆனால் அவரின் முயற்சி பலனளிக்காமல் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து ஏற்பட்ட உடனே அங்கு விரைந்த மீட்பு படையினர், இப்போது வரை 20 பேரின் உடல்கள் மீட்டுள்ளனர். 40 பேரை காயத்துடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேற்கொண்டு மீட்புப் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் மூன்று விமானிகளும் ஐந்து விமானப் பணியாளர்களும் விமானத்தில் இருந்துள்ளனர். இவர்களும் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.



சுலுவின் பிரதான நகரமாக இருக்கும் ஜோலோ மலைப் பிரதேசம். அங்கிருந்து சில தொலைவில் தான் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு தனி நாடு கோரி அபு சயாஃப் என்ற இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த போராளிகள் அந்நாட்டு அரசுடன் பல வருடங்களாக சண்டையிட்டு வருகின்றன. இந்த அமைப்பை அமெரிக்காவும், பிலிப்பைன்ஸும் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி தடை விதித்திருக்கின்றன. இங்கு பாதுகாப்புக்காக தான் விமானத்தில் ராணுவ வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. அப்போது தான் விபத்து நேர்ந்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov23

தென்கிழக்கு ஆசியாவில் சீனா தனது அதிகாரத்தை விரிவுபடு

Mar15

போலந்து எல்லைக்கு அருகில் உள்ள இராணுவ தளம் மீது ரஷ்யா

Jan27

அமெரிக்காவை சேர்ந்த மொடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எத

Apr30

பிரித்தானியாவில் இடம்பெறக்கூடிய உள்ளூராட்சி தேர்தல்

Mar09

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Jun14

உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிற

Feb21

துருக்கி மால் ஒன்றில், செல்போன் பார்த்தப்படியே நடந்த

May21

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களுக்கும் இடை

Mar30

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வழக்கு விசார

Mar15

ரஷ்யா நடத்திவரும் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு ந

May01

லண்டன் நாடாளுமன்றத்திற்கு முன்பாக “கோட்டாகோகம“ என

Jun09

நைஜீரியாவைச் சோ்ந்த பயங்கரவாத அமைப்பான போகா ஹராமின்

Jan26

இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு  நிரந்தமா

May14

அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட இணைய

Mar07

"மனித உரிமைகள் மீதும், மனிதநேயத்தின் மீதும் தாக்குதல