More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • முதல் டி20 போட்டி - டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 18 ரன்னில் இந்தியாவை வென்றது இங்கிலாந்து
முதல் டி20 போட்டி - டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 18 ரன்னில் இந்தியாவை வென்றது இங்கிலாந்து
Jul 10
முதல் டி20 போட்டி - டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 18 ரன்னில் இந்தியாவை வென்றது இங்கிலாந்து

நார்த்தம்ப்டனில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 



அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நடாலி சீவர் 55 ரன்களும், ஆலன் ஜோன்ஸ் 43 ரன்களும் எடுத்தனர்.



இந்தியா சார்பில் ஷிகா பாண்டே 3 விக்கெட் கைப்பற்றினார்.



இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே ஷபாலி வர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.ஸ்மிருதி மந்தனா 17 பந்தில் 6 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஒரு ரன்னில் வெளியேறினார்.



இந்தியா 8.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. அதன்பின் மழை நிற்கவில்லை. ஹர்லின் டியோல் 17 ரன்னும், தீப்தி ஷர்மா 4 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.



இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன், தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகி விருது நடாலி சீவருக்கு வழங்கப்பட்டது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan26

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் தொடரில் இங்கில

Sep23

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை  இடம்

Sep21

இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்

Feb04

இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின்

Jul17

தென் ஆப்பிரிக்கா அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்

Oct15

மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின், சம்ப

Sep03

இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலத்தை வென்று கொடுத்துள

Mar07

அகமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நா

Feb17

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட

Jun14

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்த

Jul06

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் ப

Feb01

         

கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக்

Feb23

இந்திய அணியில் சுற்றும் பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய அ

Mar04

இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலியா

Sep07

ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந