More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள கம்மன்பில தயாராக வேண்டும் – மரிக்கார்
நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள கம்மன்பில தயாராக வேண்டும் – மரிக்கார்
Jul 14
நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள கம்மன்பில தயாராக வேண்டும் – மரிக்கார்

அமைச்சர் உதய கம்மன்பில நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.



கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.



அவர் மேலும் தெரிவித்ததாவது:-



“விலை சூத்திரம் அமுலில் இருந்திருக்குமாயின் எரிபொருள் விலை மேலும் அதிகரித்திருக்கும் என்று அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார். அவர் இதனை சாரம் அணிந்துக்கொண்டுதான் கூறினாரா எனக் கேட்கின்றேன்.



கடந்த வருடம் பெப்ரவரி மாதம் உலகச் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 19 டொலராகக் குறைந்தபோது, எரிபொருள் விலை குறைந்திருக்க வேண்டும். 50 ரூபாவுக்குக் குறைந்திருக்க வேண்டும். எரிபொருள் விலையைக் குறைத்தார்களா?



அதேபோன்று கடந்த வருடம் ஒரு பீப்பாய் எண்ணெயின் சாதாரண விலை டொலர் 45.5 ஆகக் காணப்பட்டது. இதன்போதேனும் எரிபொருள் விலையைக் குறைத்தார்களா? எரிபொருள் விலையைக் குறைக்காது டொலர் 64ஆக உயர்வடைந்தபோது எரிபொருள் விலையை அதிகரித்துள்ளனர்.



வருட இறுதியில் உலக சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை டொலர் 100ஆக அதிகரிக்கப்போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஏனெனில் கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையுடன் உலக நாடுகள் திறக்கப்படும்போது, விமான நிலையங்கள் திறக்கப்படும்போது, உலக மக்களின் வாழ்வாதார நிலைமை சாதாரண நிலையை அடையும்போது, நுகர்வு அதிகரிக்கும்போது எரிபொருள் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.



விலை சூத்திரம் அமுலில் இருந்திருக்குமாயின் குறைந்த விலைக்கு எரிபொருள்களை விநியோகித்திருக்கலாம். எனவே, எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் கதைக்காது நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்வதற்கு உதய கம்மன்பில தயாராக வேண்டும் என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul26

வவுனியா ஓமந்தை பகுதியில் வவுனியா பிரதேச ஊடகவியலாளர்க

Jun16

அம்பாறை திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட ப

Jan16

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வ

Sep23

எதிர்வரும் வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையும்

Oct01

சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புத

Mar06

குருணாகலில் குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது ம

Jan15

அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்

Sep28

நேற்றைய தினத்தில் (27) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,

Mar12

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று

Jan19

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழ

Apr02

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப

Feb04

தெற்கு கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளி மண்ட

Sep25

அரசாங்க உத்தியோகத்தர்கள் பொருத்தமான ஆடைகளை அணிவது தொ

Jan22

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்ற

Sep26

இலங்கையில் அகிம்சை வழியில் உண்ணா நோன்பு இருந்து உயிர்