More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கேரளாவில் யூ டர்ன் அடிக்கும் கொரோனா.. அதிகரிக்கும் கேஸ்கள்.. இந்தியாவில் புதிதாக 41283 பேர் பாதிப்பு !
கேரளாவில் யூ டர்ன் அடிக்கும் கொரோனா.. அதிகரிக்கும் கேஸ்கள்.. இந்தியாவில் புதிதாக 41283 பேர் பாதிப்பு !
Jul 18
கேரளாவில் யூ டர்ன் அடிக்கும் கொரோனா.. அதிகரிக்கும் கேஸ்கள்.. இந்தியாவில் புதிதாக 41283 பேர் பாதிப்பு !

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,283 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா கேஸ்கள் குறைவதற்கான அறிகுறிகள் பெரிதாக தெரியவில்லை. இன்னும் இந்தியாவில் 40 ஆயிரத்திற்கும் குறையாமல் தினசரி கேஸ்கள் பதிவாகி வருகிறது. கேரளா, மகாராஷ்டிரரா ஆகிய மாநிலங்கள் இன்னும் அதிக அளவில் கேஸ்கள் பதிவாகி வருகிறது.



இந்த இரண்டு மாநிலங்களில் இருந்துதான் இந்தியாவில் அதிக அளவில் கேஸ்கள் பதிவாகிய வருகிறது. ஆகஸ்ட் மாதம் கொரோனா மூன்றாம் அலை கேஸ்கள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.



இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,283 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 517 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் 31,105,270 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 413,640 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 30,262,233 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 429,397 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.



மகாஷ்டிராவில் 62,05,190 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 8172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,00,429 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 59,74,594 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 1,26,851 பேர் பலியாகி உள்ளனர்.



கேரளாவில் இன்னும் கேஸ்கள் குறையவில்லை. இந்தியாவில் பதிவாகும் கேஸ்களில் பெரும்பாலான கேஸ்கள் கேரளாவில் இருந்தே பதிவாகிறது. கேரளாவில் 31,46,981 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 16148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,24,777 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 30,06,439 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 15269 பேர் பலியாகி உள்ளனர்.



கர்நாடகாவில் கொரோனா பரவல் கொஞ்சம் குறைந்துள்ளது. கர்நாடகாவில் 28,82,239 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 1869 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,082 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 28,16,013 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 36121 பேர் பலியாகி உள்ளனர்.



தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 25,33,323 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 2205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28,590 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். நேற்று 43 பேர் தமிழ்நாட்டில் பலியானார்கள். 24,71,038 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 33,695 பேர் பலியாகி உள்ளனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar12

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்

Apr10

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு கு

Mar28

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதி

Jan29

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சி

Jun02

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி.

May30

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு

Mar26

திமுகவின் பெரும்புள்ளியான எ.வ. வேலுவின் வீடுகள், அறக்க

Jun09

இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படும் என அ

Jul26

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையி

Sep30

இந்தியாவுக்கான புதிய பாராளுமன்ற கட்டிடம் டெல்லியில்

Jul25

பாமக நிறுவனர் ராமதாசின் 83-ஆவது பிறந்தநாள் இன்று . இதை மு

Oct26